2025 ஆயுத பூஜை: எந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்?
நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டினை போற்றி வழிபாடு செய்யகூடிய முக்கியமான பண்டிகையாகும். இந்த நவராத்திரி 9 நாள் பண்டிகையாக உலகம் எங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் நவராத்திரி ஒன்பதாவது நாளில் அம்பிகை அனைத்து தெய்வங்களிடமிருந்து பெற்ற ஆயுதங்களை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றது.
இதனால் இந்த நாளுக்கு ஆயுத பூஜை என்று பெயர் வந்து கொண்டாடப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக தான் நாம் ஆயுத பூஜை அன்று அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதாவது நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்து கொண்டாடுகின்றோம்.
மேலும் நவராத்திரி விழாவில் பத்தாவது நாளில் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜய் தசமி விழா இருக்கிறது. அதோடு நவராத்திரி பண்டிகை கடைசி இரண்டு நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என்பதால் நாம் அனைவரும் இந்த நாளை தவற விடாமல் வீடுகளில் வழிபாடு செய்யவேண்டியது அவசியம் ஆகும்.
இந்த நாளில் பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து அருகம்புல் ஆகியவை வைத்து வழிபாடு செய்த பிறகு தான் நாம் கல்வி, கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும்.
அன்று பூஜை அறையில் நாம் பயன் படுத்தும் புத்தகங்கள் பேனாக்களும் பொட்டு வைத்து அலங்காரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
தொழில் செய்பவர்கள் அவர்களுடைய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்வது அவசியம் ஆகும். வண்டி வாகனங்கள் வைத்து தொழில் செய்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக அவற்றிக்கு சந்தன குங்குமம் வைத்து மாலை போட்டு வழிபாடு செய்வது அவசியம் ஆகும்.
பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரிகடலை அவல்பாயாசம் போன்ற பல வகையான உணவுகள் பழங்கள் வைத்து பூஜை செய்து நாம் நம்முடைய வேண்டுதலை வைக்க வேண்டும். அதாவது நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மதித்து போற்ற வேண்டும்.
அதனை கருத்தில் கொண்டு நம்மை முன்னேற்றக் கூடிய நம்மை வாழ வைக்க கூடிய அனைத்து விஷயங்களையும் நாம் இந்த பூஜை வேளையில் மனதார நினைத்து அதற்கு நன்றி சொல்லி வழிபாடு செய்யும்பொழுது அம்பிகையின் அருளால் நமக்கு வெற்றிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







