நீங்கள் அடிக்கடி இந்த 2222 எண் பார்க்கிறீர்களா? கட்டாயம் இது நடக்குமாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது முக்கியமான மற்றும் பலராலும் நம்பக்கூடிய விஷயமாக இருக்கிறது. மேலும் எண் கணிதத்தில் பல்வேறு வகைகள் இருக்கிறது. அதில் ஏஞ்சல் எண்களாக சில எண்களை குறிப்பிடுகிறார்கள். இந்த ஏஞ்சல் எண்ணானது நம்முடைய கண்களுக்கு அடிக்கடி வசப்படும் வகையில் இருக்க கூடிய விஷயமாக இருக்கும்.
அப்படியாக இந்த ஏஞ்சல் எண்ணாக கருதப்படும் 2222 என்ற எண் அடிக்கடி நம் கண்களுக்கு தெரிந்தால் இந்த பிரபஞ்சம் நமக்கு சொல்ல காத்திருக்கும் செய்தி என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஏஞ்சல் எண் 2222 கண்களுக்குத் தெரிகிறது என்றால் நமக்கு இந்த பிரபஞ்சம் நாம் நினைக்கும் செயலை நிறைவேற்றக்கூடிய ஒரு ஆசிர்வாதத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த எண் 2222 என்பது கடவுள் நம்மிடம் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறார் என்பதையும் குறிப்பதாகும்.
இவ்வாறான எண்கள் அவ்வப்போது நம் கண்களுக்கு தெரிகிறது என்றால் நம்மை சுற்றி ஒரு நேர்மறையான மாற்றங்கள் நடக்க காத்திருப்பதாகவும் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை வெகு விரைவில் பெறப்போவதாகவும் நம்பிக்கை.
மேலும் இந்த எண் 2222 நாம் அடிக்கடி பார்க்கும்பொழுது நம் வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் அனைத்தும் விலகி நம்முடைய கனவுகள் நினைவாகும் காலம் வரப்போவதாக சொல்கிறார்கள்.
அதோடு நம் வாழ்க்கையில் சமநிலை பொறுமை போன்றவை உருவாகும் என்கிறார்கள். அதேபோல் நாம் ஏதேனும் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது இவ்வாறான எண்களை பார்ப்பது நம்முடைய மன அழுத்தம் குறைந்து பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும் என்பதை குறிப்பதாகும்.
பொதுவாகவே இந்த ஏஞ்சல் எண்கள் என்பது நாம் ஏதேனும் ஒரு துயரத்தில் இருக்கும் பொழுது தான் நம் கண்களில் படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
ஆதலால் இந்த பிரபஞ்சம் நம்முடைய வார்த்தைகளையும் நம் செயல்களையும் கவனித்துக் கொண்டே இருப்பதால் நாம் நல்ல எண்ணங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது துயர நிகழ்வுகளை சந்தித்தால் இவ்வாறான செய்திகளை நமக்கு கொடுத்து நம்பிக்கை ஊட்டுவதாக எண் கணிதத்தில் நம்பப்படுகிறது.
மேலும் இவ்வாறான ஏஞ்சல் எண்களை பார்க்கும் பொழுது மனதில் ஏதேனும் வேண்டுதலை சிலர் வைப்பதுண்டு. அவ்வாறு வைக்கும் வேண்டுதலும் அவர்களுக்கு விரைவில் நிறைவேற கூடிய தன்மை கொடுக்கும் என்பதால் ஏஞ்சல் எண்களை நாம் பார்க்கும் பொழுது நல்ல சிந்தனையை நமக்குள் செயல்படுத்துவது முக்கியமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







