தீபாவளி அமாவாசை எப்பொழுது? நேரம் மற்றும் தேதி எப்பொழுது தெரியுமா?
இந்து மத பண்டிகைகளில் தீபாவளி என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் போது பலரும் எந்த ஊரில் இருந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு வந்துவிடுவார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த பண்டிகையின் பொழுது எல்லோருடைய வீடுகளும் சுத்தம் செய்து வண்ண பொருட்கள் கொண்டு அலங்காரம் செய்வதும், புது பொருட்கள் வாங்குவது போன்ற பல நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள். இந்த தீபாவளி என்பது பலருக்கும் தெரிந்தது ஒரு நாள் கொண்டாடும் பண்டிகையாகத்தான்.
ஆனால் தீபாவளி என்பது தொடர்ந்து ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பல்வேறு பகுதிகளில் உள்ள பலரும் இந்த நாளில் லட்சுமி தேவியை தவறாமல் வழிபாடு செய்வார்கள். இந்த தீபாவளி நாளன்று செய்யும் பூஜை என்பது பக்தர்களின் இருளைப் போக்குவதற்கு கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை ஆகும்.
ஆதலால் தங்களுடைய வீடுகளில் முற்றங்களில் விளக்குகளையும் ஏற்றி செல்வத்தை வழங்கும் லட்சுமி தேவியையும் விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்வார்கள், பொதுவாகவே தீபாவளி அமாவசை நாளில் வருவதால் பலரும் இதை கடைபிடிப்பார்கள்.
நம்முடைய இந்து மதத்தில் அமாவாசை தினம் என்பது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அவர்களுக்கு உணவு அளித்து அவர்களை வழிபாடு செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். அப்படியாக தீபாவளி தினத்தில் வரும் அமாவாசை திதி நேரம் எப்போது என்று பார்ப்போம்.
கார்த்திகை மாதத்தின் இருண்ட பதினைந்து நாட்களில் (கிருஷ்ண பக்ஷம்) 13ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் 20ஆம் தேதி அன்று தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது.
பலரும் தீபாவளி அன்று அசைவம் தான் எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் தீபாவளி நாளில் அமாவாசைதிதி வருவதால் அமாவாசை பின்பற்றபவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அக்டோபர் 20ஆம் தேதி மாலை 3:44 மணிக்கு தொடங்கி மறு நாள் அக்டோபர் 21ஆம் தேதி மாலை 5:54 மணிக்கு திதி முடிகிறது.
ஆக தீபாவளி பண்டிகை என்பது அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய பொருட்கள் வாங்கி கொண்டாடும் பண்டிகையையும் தாண்டி வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய இருளை போக்குவதற்காக வழிபாடு செய்யக்கூடிய அற்புத நாளாக இருக்கிறது.
அதாவது நமக்கு எப்பேற்பட்ட கஷ்டங்கள் துயரங்கள் இருந்தாலும் அந்த துயரங்கள் விலகி வீடுகளில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக குடும்பமாக சேர்ந்து கொண்டாட கூடிய ஒரு அற்புதமான பண்டிகை என்பதால் இந்த நாளில் நாம் குடும்பங்களோடு சேர்ந்து வழிபாடு செய்து கொண்டாடி மகிழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







