200 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி அன்று நடக்க இருக்கும் மிகப்பெரிய யோகம்
வேத ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய இடத்தை ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் மாற்றும். அந்த வகையில் ஏதேனும் ஒரு கிரகங்கள் மற்றொரு கிரகத்தோடு இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். இந்த யோகமானது 12 ராசிகளுக்கும் ஒரு விதமான தாக்கத்தை கொடுக்கும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாளில் கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரிய பகவானும் தேவர்களில் குருவாக கருதப்படும் குரு பகவானும் 90 டிகிரி கோணத்தில் இருந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளனர்.
இந்த யோகமானது சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்பு தீபாவளி நாளில் நடக்க இருப்பதால் இவை பெரும் அளவில் சில ராசிகளுக்கு நன்மைகளை அளிப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் பல குழப்பத்தை விலக்கி நன்மை அதிகரிக்க போகிறது. மனதில் தெளிவும் தைரியமும் உண்டாகும். தொழில் ரீதியாக இவர்கள் இட மாற்றம் செய்ய நேரலாம். ஒரு சிலருக்கு சம்பள உயர்வு, நினைத்த இடத்திலிருந்து உதவிகளும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் செய்யும் நபர்களுக்கு இந்த காலமானது மிகவும் பொன்னான காலமாகும். வீடுகளில் தங்கம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த யோகமானது அவர்கள் தொழில் வாழ்கையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யப்போகிறது. மனதில் எதையும் சாதிக்கக்கூடிய நம்பிக்கை பிறக்கும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலமாகும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் நல்ல முறையில் முடிவடையும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். தொழில் ரீதியாக சந்தித்த எதிரிகள் விலகி செல்வார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் திருமண வரத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த செய்திகள் இவர்கள் கைவசம் வர போகிறது. சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இடமாற்றம் இவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







