தீபாவளி அன்று உருவாகும் மகா புருஷ ராஜ யோகம்- இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
2025 ஆண்டு தீபாவளி அன்று ஜோதிடத்தில் மிகப்பெரிய யோகம் உருவாக போவதாக சொல்கிறார்கள். இந்த யோகமானது சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக உள்ளதாகவும், இந்த யோகத்தால் மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றமும் வாழ்க்கையில் தாக்கத்தை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது தீபாவளி அன்று குரு தனது உச்ச ராசியான கடகத்தில் வக்கிரமாகி ஹன்ச மகாபுருஷ ராஜ யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த யோகம் ஒரு சிலருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மரியாதையையும் சமுதாயத்தில் நல்ல முன்னேற்றத்தையும் தேடி கொடுக்கப் போகிறது. ஒரு சிலருக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். உங்களின் திறமைக்கான மதிப்பும் பாராட்டுக்களும் கிடைக்கப் போகிறது. மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கவலைகள் விலகக் போகிறது.
கடகம்:
கடக ராசிக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கப்படுகிறது. தொழில் ரீதியாக இவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறப்போகிறார்கள். அதை போல் நீண்ட நாட்களாக திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாகவும் இருப்பார்கள். உங்களுடைய திறமைக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். இவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறக்கூடிய அற்புதமான நாளாகும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடப் போகிறீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







