தீபாவளி: இன்றைய சிறப்பு ராசி பலன்( 20-10-2025)

Report

மேஷம்:

இன்று குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். வாழ்க்கை துணையின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். மதியம் மேல் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் வீடுகளில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முறையில் முடியும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வீடுகளில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய முக்கியமான புரிதல் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத விதமாக சில முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

கடகம்:

இன்று நீங்கள் முக்கியமான நபரை சந்தித்து உங்கள் நேரத்தை செலவு செய்வீர்கள். வீடுகளில் உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவைகளை அறிந்து செயல்படுவார்கள். நன்மையான நாள்.

சிம்மம்:

இன்று பெரியவர்களின் பரிபூர்ண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். யோகமான நாள்.

கன்னி:

இன்று உணவு பழக்கவழக்கத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும்.

தீபாவளி: இந்த இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றிடுங்கள்

தீபாவளி: இந்த இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றிடுங்கள்

துலாம்:

இன்று சிலரின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பிறக்கக்கூடிய அற்புதமான நாள். பெற்றோர்களுடன் சந்தோஷமான நேரம் செலவு செய்வீர்கள்.

விருச்சிகம்:

உங்கள் வீடுகளில் சில எதிர்பாராத செய்து வந்து சேரலாம். உறவினர்கள் இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

தனுசு:

மனதில் எதையும் சமாளிக்கும் திறன் பிறக்கும். நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்:

இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வீண் வாக்கு வாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். மனதிற்கு பிடித்த வேலை செய்து மகிழ்வீர்கள். நன்மையான நாள்.

கும்பம்:

குடும்பத்துடன் தொலை தூர பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். உங்கள் மரியாதை உயரும் நாள்.

மீனம்:

இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். பிள்ளைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. சில மகிழ்ச்சியான செய்தி உங்களை வந்து சேரும். நன்மையான நாள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US