2025 குரு பெயர்ச்சி:யோகத்தில் நனையப்போகும் 3 ராசிகள் யார்?
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.இவர் வருடத்தில் ஒருமுறை தனது இடத்தை மாற்றி அமைப்பார்.இந்த இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் பலவித மாற்றங்களை உருவாக்கும்.
அப்படியாக கடந்த வருடம் குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார்.தற்போது 2025 ஆம் ஆண்டு அவர் தனது இடத்தை மாற்றுகிறார்.அவருடிய இந்த மாற்றம் 12 ராசிகளுக்கு ஒரு வித தாக்கத்தை உண்டாக்கும்.
அதே போல்,அக்டோபர் ஒன்பதாம் தேதி குருபகவான் ரிஷப ராசியில் வக்கிர பயணத்தை தொடர்ந்தார்.2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருடைய வக்கிர நிவர்த்தி பயணத்தை தொடங்குறார்.இதனால் சில ராசிகளுக்கு சிறந்த அதிர்ஷ்டம் உருவாகும்.அவை எந்த ராசிகள் என பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்கிர நிலை பயணத்தை தொடங்கியுள்ளார்.இதனால் இவர்களுக்கு பொன்னான காலம் ஆகும்.குடும்பத்தில் சந்தோசம் சுப காரியம் நடைபெறும்.முகம் தெளிவடையும்.தொழிலில் நீங்கள் போடும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.மனதில் எதையும் சாதிக்கும் நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் 10 வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை பயணத்தை அடைந்து உள்ளார்.இதனால் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் முற்றிலுமாக குறையும்.உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயமான பொருட்களையும் வாங்குவீர்கள்.சகோதரி விஷயத்தில் உங்களுக்கு ஏற்பட்ட சண்டைகள் தீர்விற்கு வரும்.
கடகம்:
கடக ராசியில் 11வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை பயணத்தை அடைந்து உள்ளார்.இதனால் தடை இல்லாத வருமானம் கிடைக்கும்.உடல் நலம் சீராகும்.குழந்தைக்கு தேவையான அனைத்து விஷயங்களை சரியாக செய்து கொடுப்பீர்கள்.வண்டி வாகனம் மாற்றும் யோகம் கிடைக்கும்.நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.தெளிவான சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |