2025 அனுமன் ஜெயந்தி: இன்று இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள்- வெற்றி நிச்சயம்
ஸ்ரீ ராம பிரான் எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் னுமன் கட்டாயமாக இருப்பார். மேலும், தீவிர ராம பக்தரான அனுமன் அவதரித்த தினத்தையே நாம் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றோம். அனுமன் தமிழ் புராணங்கள் படி மார்கழி மாதம் அமாவாசையும் மூல நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாளில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
அதனால் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் விரதம் இருந்து முன்னோர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதற்கு எவ்வாறு உகந்த நாளோ, அதைப்போல் அனுமனை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் அனுமனுடைய அருளால் நம் வாழ்க்கை நிச்சயம் வளமாக மாறும்.
அதோடு அனுமன் ஜெயந்தி என்பது தென் மாவட்டங்களில் மட்டுமே மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களை எடுத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் தான் அனுமன் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்.
அப்படியாக 2025 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கட்டாயமாக வலிமை என்பது மிகவும் அவசியம். திடீர் என்று எங்கிருந்து ஆபத்துக்கள் வருகிறது என்று நிச்சயம் நமக்கு தெரியாது.

மேலும், இந்த பூமியில் மனிதர்களால் மட்டுமே நமக்கு ஆபத்து நேரும் என்று சொல்லிவிட முடியாது. நாம் முன் ஜென்மத்தில் செய்த கர்மவினையால் கூட இந்த பிறவியில் நமக்கு ஏதேனும் ஒரு இக்கட்டான நிலையில் ஒரு மிகப்பெரிய துன்பத்தையும் ஆபத்தையும் நாம் சந்திக்க நேரலாம். அப்பொழுது நிச்சயமாக நமக்கு ஒரு தெய்வத்தின் துணை வேண்டும்.
அப்படியாக எவர் ஒருவர் எந்த பிறவியில் எந்த பாவங்கள் செய்திருந்தாலும் அதை திருத்திக் கொண்டு இந்த பிறவியில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று நினைத்து அனுமனை மனதார வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களை அனுமன் எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டார்.
மேலும் அனுமனுடைய வழிபாட்டில் மிக முக்கியமாக அவருடைய மந்திரங்களை பாராயணம் செய்வது. எவர் ஒருவர் அனுமனுடைய மந்திரங்களை தொடர்ந்து பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுடைய உடலில் இருக்கக்கூடிய அனைத்து தீய ஆற்றல்களும் வெளியேறி ஒரு நல்ல அதிர்வலைகள் அவர்களுக்குள் வருவதை நாம் காணலாம்.
அது மட்டும் அல்லாமல் அவர்கள் நேர்மையான வழியிலும் தர்மத்தை கடைபிடிக்கக்கூடிய ஒரு நல்ல மனிதராகவும் இந்த சமுதாயத்தில் வலம் வருவார்கள். மேலும் அனுமனுடைய அருளை பெறுவதற்கு நாம் தினமும் 108 முறை "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதலாம். இவ்வாறு செய்வது நமக்கு ஸ்ரீ ராமபிரான் அருளோடு சேர்த்து அனுமனுடைய அருளையும் விரைவில் பெற்றுக் கொடுக்கும்.

பூஜைகள்:
அப்படியாக இன்று அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு துளசி மாலையும் அவருக்கு மிகவும் பிடித்த வடை மாலையும் வெண்ணெய் காப்பு ஆகியவற்றை சாத்தி நாம் வழிபாடு செய்யலாம்.
மேலும் அனுமனுக்கு நம் வெண்ணை சாற்றி வழிபாடு செய்யும் பொழுது அந்த வெண்ணை உருகும் நேரத்தில் நம்முடைய துன்பங்களும் கரைந்து போகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.
அதேபோல் இந்த அற்புதமான நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டாலும் நமக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
ஆதலால் இன்று மறவாமல் உங்கள் வீடுகளில் அருகில் இருக்கக்கூடிய அனுமன் ஆலயம் சென்று அவரை சரணடைந்து வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பங்களிலிருந்து விடுபட நிச்சயம் அவரை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |