நாளை முதல் தொடங்குகிறது குலசை தசரா திருவிழா - இந்த ஆண்டு என்ன சிறப்புகள் தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் உலகப் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக திகழும் இந்த குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும்.
அதாவது ஆண்டுதோறும் தசராவை முன்னிட்டு இந்த கோவிலில் பத்து நாட்கள் திரு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா நாளை 23. 09. 2025 அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10. 2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. இதனை அடுத்து 03.10. 2025 அன்று கொடி இறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இந்த திருவிழா முடிவடைகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் பத்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திருவிழாவில் பல பக்தர்கள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து தங்களை பல வகையில் அலங்காரம் செய்து கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். தசரா திருவிழாவில் முத்தாரம்மனிடம் வழிபாடு செய்து நாம் என்ன வரம் கேட்கின்றோமோ அந்த வரத்தை அம்மன் நமக்காக அருள்கிறார்என்பது பக்தர்களின் தவிர்க்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
அதனால் தசரா திருவிழாக்கு தவறாமல் வந்து வழிபாடு செய்கின்றனர். இன்றும் பல வீடுகளின் துயர் துடைப்பவராக குலசை முத்தாரம்மன் இருக்கிறார். ஆக முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







