நாளை (12-09-2025) பித்ரு தோஷம் விலக இந்த விஷயத்தை செய்ய மறக்காதீர்கள்
நம்முடைய குடும்பங்களில் இறந்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தவும் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் மகாளய பட்ச காலத்தில் அவர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் மகாளய பட்சகாலத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் செய்ய தவற விடக்கூடாது.
அதுதான் மகாபாரணி வழிபாடு. இந்த வழிபாடு நமக்கு உண்டான பித்ரு தோஷத்தையும் பித்ரு சாபத்தையும் நீக்கக்கூடிய ஒரு அற்புதமான வழிபாடு ஆகும். அப்படியாக மகாபாரணி நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
மகாபாரணி என்பது புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் எமதர்மராஜா உடைய நட்சத்திரமாகும். இந்த நாளில் நம்முடைய குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப எமதர்ம ராஜ அவர்களுக்கு சொர்கம் நரகம் வழங்குவதாக ஐதீகம்.
அப்படியாக எமதர்மராஜாவுக்கு உரிய நாளான மகாபாரணி நட்சத்திர நாளில் நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதிகள் தர்ப்பணம் செய்வதும் அதோடு யம தீபம் ஏற்றுவதும் எமதர்மனை மனம் மகிழச்செய்து நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு சொர்க்கம் செல்வதற்கான ஆசீர்வாதத்தை அவர் அருளுகிறார்.
இந்த ஆண்டு மகாபாரணி செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று வருகிறது. அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி 6 மணிக்கு துவங்கி செப்டம்பர் 12ஆம் தேதி மாலை 4.30 மணி வரை இந்த பரணி நட்சத்திரம் உள்ளது. அதனால் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை அல்லது செப்டம்பர் 12ஆம் தேதி காலை மகாபாரணி தீபம் ஏற்றுவது நன்மையை கொடுக்கும்.
இந்த தீபத்தை வீடுகளில் மிக உயரமான இடத்தில் ஏற்றுவது அவசியம். இவ்வாறு உயரமான இடங்களில் ஏற்றுவதற்கான வசதிகள் வீடுகளில் இல்லை என்றாலும் வழக்கமாக பூஜை அறையில் சுவாமி படம் முன்பு விளக்கேற்றும் பொழுது தனியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது இறந்த நம் முன்னோர்களும் மன மகிழ்ச்சி அடைவதோடு எமதர்மராஜாவும் மனம் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் யம தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நமக்கு விபத்துக்கள் திடீர் மரணம் போன்றவை நிகழாமல் எமதர்மராஜன் நமக்கு ஆசிர்வாதம் வழங்குகிறார்.
யம தீபம் ஆனது துர்மரணத்தை தழுவியவர்களுக்காக கட்டாயம் ஏற்ற வேண்டிய தீபம் ஆகும். யம தீபமானது எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், வீடுகளிலும் 8 திசைகளிலும் தாமரைத் தண்டு திரிகளை வைத்து ஏற்றி ஒவ்வொரு திசைகளிலும் பார்த்து நின்று அந்தந்த திசைகளுக்கு உரிய தேவர்களை தேவதைகளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டு திசைகளிலும் நாம் தீபம் யம தீபம் ஏற்றும் பொழுது நமக்கு மரண பயம் உண்டாகாமலும் அகால மரணம் உண்டாகாமலும் எமதர்மராஜர் நமக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







