2025 ஐப்பசி பௌர்ணமி: செல்வ வளம் பெருக இன்று இந்த மந்திரங்கள் சொல்ல தவறாதீர்கள்
சிவபெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமான வழிபாடாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி அன்னாபிஷேகம் இருக்கிறது. இந்த நாளில் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை காண்பவர்களுக்கு வாழ்க்கையில் வறுமையே ஏற்படாத நிலை உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த உலகத்தில் மனிதன் உயிர் வாழ மிக முக்கியமானதாக அன்னம் இருக்கிறது. எல்லா ஜீவராசிகளுக்கும் படியளுக்கும் பார்வதி தேவி காசியில் நமக்கு அன்னபூரணியாக காட்சியளிக்கிறாள். அப்படியாக இறைவனுக்கு அருவுருவமான லிங்கத்திற்கு அன்னம் சாற்றி வழிபாடு செய்யும் நாளே அன்னாஅபிஷேக நாள்.
ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளில் தான் சந்திரனுடைய முழு சாபம் நீங்கிய நாள் என்ற ஒரு விசேஷத்தோடு சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் முழுமையாக நீங்கிய நாளாகும்.

சிவபெருமான் பிச்சாடனராக வந்த போது உலகிற்கே படியளுக்கும் ஈசனுக்கு அன்னை அன்னபூரணி அன்னமிட்டு படி அளந்த நாள் இந்த ஐப்பசி பௌர்ணமி நாள். இந்த நாளில் சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.
அதோடு நம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான அன்னம் அவை பல தலைமுறையினருக்கு அன்னபூரணியின் அருளால் வறுமையில்லாத ஒரு நிலை கிடைக்கும். அப்படியாக இந்த நாளில் நாம் வழிபாடு செய்யும் பொழுது அன்னபூரணியின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

மந்திரங்கள்:
"ஓம் அன்னபூர்ணே சதாபூர்ணே
ஷங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம்
பிக்ஷாம் தேஹி ச பார்வதி"
அன்னபூரணி ஸ்தோத்ரம் :
"நித்யானந்தகரீ வராபயகரீ லெளந்தர்யரத்னாகரீ
நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ"
இந்த மந்திரங்களை இன்று ஐப்பசி பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்யும் பொழுது நம் வீடுகளில் அமர்ந்து பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம். அதோடு தினமும் வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை அன்னபூரணி தேவி முன்பு நாம் அமர்ந்து பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற துன்பங்கள் பொருளாதார கஷ்டங்கள் யாவும் விலகி நமக்கு நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |