கடகத்தில் நுழையும் குரு - இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் தொடங்கியாச்சாம்
ஜோதிடம் என்பது கிரகங்கள் மாற்றத்தினால் நிகழக்கூடிய மற்றும் கணித்து சொல்ல கூடிய ஒரு விஷயமாகும். அப்படியாக கிரகங்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய நேரத்தில் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் கிரகங்களில் செல்வம், குடும்பம், புகழ் ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கக்கூடியவர் குரு பகவான்.
இவர் அக்டோபர் 18ஆம் தேதி அவருடைய உச்ச ராசியான கடக ராசிகள் வக்ரமாக நுழைய இருக்கிறார். அப்படியாக குரு பகவானின் இந்த கடக ராசி பெயர்ச்சி எந்த சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
மிதுனம்:
குரு பகவானின் கடக ராசி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மனதில் ஒரு விதமான தெளிவை கொடுக்கப் போகிறார். இவர்கள் இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் உயர்ந்த பதவி நிலையை அடையப் போகிறார்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் மற்றும் வீடு நிலம் வாங்கும் யோகங்கள் அமையும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல மாற்றத்தை கொடுக்கப் போகிறது.
கடகம்:
கடக ராசியினருக்கு குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்புகளை கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கப் போகிறது. ஒரு சிலருக்கு கடன் தொல்லைகள் விலகும் நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை வாங்கும் யோகம் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த குரு பகவானின் பெயர்ச்சியானது அவர்களுக்கு நல்ல தாக்கத்தை உண்டு செய்ய போகிறது. இந்த காலகட்டத்தில் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் ஒரு சிலருக்கு தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றமும் நினைத்த வாய்ப்புகளும் கிடைக்கப் போகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு மிகுந்த துணையாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஒரு சிலருக்கு அதிக நாட்டம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







