ஒரு வருடம் வீடுகளில் கொலு வைத்தால் தொடர்ந்து வைக்க வேண்டுமா?
நம்முடைய இந்து மத பண்டிகைகளில் நவராத்திரி என்பது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்பது நாள் விழாவாகும். இந்த நவராத்திரி என்பது சக்தி தேவியை மனதார ஒன்பது நாட்களும் வழிபாடு செய்து அவளின் அருளை பெறக்கூடிய அற்புதமான நாள் ஆகும்.
அப்படியாக இந்த நவராத்திரி விழாவின் பொழுது நம் வீடுகளில் கொலு அமைத்து ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு ஒவ்வொரு வகையான நெய்வேத்தியம் மற்றும் ஆடைகள் அணிவித்து இந்த விழாவை நாம் கொண்டாடுவோம். மேலும், பலருக்கும் வீடுகளில் கொலு அமைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆசைகள் இருந்தாலும் பலராலும் இதை செய்ய முடிவதில்லை.
காரணம் ஒருமுறை கொலு வைத்து வழிபாடு செய்துவிட்டால் தொடர்ந்து தவறாமல் நம் வீடுகளில் கொலு வைக்க வேண்டும் என்ற ஒரு மரபின் காரணமாக அவர்கள் இந்த வருடம் வைத்துவிட்டோம் என்றால் மறு வருடம் ஏதேனும் சில வேலைகளால் கொலு வைக்க முடியாத நிலை வந்து விடுவோமோ என்று அச்சத்தில் வீடுகளில் கொலு வைப்பதற்கு அவர்கள் தயங்குகிறார்கள்.
அப்படியாக ஒருமுறை வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்தவர்கள் ஒவ்வொரு வருடமும் கொலு வைத்து வழிபாடு செய்ய வேண்டுமா? என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த உலகம் மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் பலருக்கும் இறை சிந்தனை வருவதே ஒரு பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு வீடுகளில் கொலு அமைத்து நவராத்திரி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதே ஒரு மிகச்சிறந்த விஷயமாகும்.
அப்படியாக, அவர்களுடைய எண்ணம் அவர்களை வீடுகளில் கொடு வைக்க தூண்டுகிறது என்றால் அவர்கள் அதை செய்து விடுவது அவர்கள் குடும்பத்திற்கு மிகச்சிறந்த நன்மைகள் கொடுக்கும்.
மேலும் ஒரு வருடம் வீடுகளில் கொலு வைக்க நீங்கள் தொடங்கி விட்டீர்கள் என்றால் மறு வருடம் உங்களுக்கு எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் சரி எவ்வளவு இக்கட்டான நிலையாக இருந்தாலும் சரி அம்பிகையின் அருளால் உங்களுடைய மனதின் தூண்டுதலோடு நீங்கள் வருடா வருடம் கொலு வைப்பதற்கு தொடங்கி விடுவீர்கள்.
இதுதான் அம்பாளின் அருள் அவளின் மகிமை. ஆக செயல் தான் இங்கு முக்கியமாக இருக்கிறது. அந்த செயலை எந்த ஒரு தயக்கமும் இன்றி நாம் செய்ய தொடங்கி விட்டோம் என்றால் இந்த பிரபஞ்ச பலவகையில் நமக்கு பல வழிகளை காண்பிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அதனால் உங்கள் மனதில் கொலு வைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றி விட்டது என்றால் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு கொலு படிக்கட்டுகள் அமைத்து நவராத்திரி விழாவை உங்கள் வீடுகளில் குடும்பத்துடன் உறவினர்களுடன் கொண்டாடத் தொடங்குங்கள்.
மறு வருடம் அவை எவ்வாறு அமையும் என்ற ஒரு தயக்கத்தை தவிர்த்து இதை செய்ய தொடங்கினோம் என்றால் ஒவ்வொரு வருடமும் அம்பிகை உங்கள் வீட்டிற்கு வருகை தர விரும்புவாள் அவள் ஆசையும் ஆசீர்வாதமும் உங்களை ஒவ்வொரு வருடமும் கொலு வைப்பதற்கான அமைப்புகளை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்தி கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







