உருவாகும் கால யோகம்- இந்த 3 ராசிகளுக்கும் பணமழை கொட்ட போகிறதாம்
2025 அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் உருவாக இருக்கிறது கால யோகம். இந்த கால யோகத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவும் அவர்கள் வீடுகளில் சுபகாரிய பேச்சு வார்த்தைகளும் நடைபெறும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் சிம்மத்திலும், சந்திரன் கும்ப ராசியிலும் இருக்கிறார்கள், இதன் காரணமாக கால யோகம் உருவாகிறது. இந்த யோகம் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல தாக்கங்களை கொடுத்து மிக உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்ல போவதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த வாரம் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை பெறக்கூடிய மாதமாக அமையப் போகிறது. இவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் பொருளாதாரத்திலும் சிறந்தும் விளங்க போகிறார்கள். இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் காதல் மலரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தைகள் நல்ல முறையில் முடிவடையும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த கால யோகம்மனதில் ஒரு அற்புதமான புரிதல் உண்டாகக் கூடிய காலமாகும். தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி நோக்கிய செல்லக்கூடிய அற்புதமான வாய்ப்பு உருவாகும். ஒரு சிலருக்கு வீடுகளில் ஆதரவும் கிடைத்து இவர்கள் நல்ல சந்தோஷமான முறையில் வாழ போகிறார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்திகள் இவர்களை வந்து சேரும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரத்தில் அதற்கான நல்ல தீர்வை பெறக்கூடிய காலமாக அமையப்போகிறது.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த கால யோகம் அவர்கள் குடும்பத்தினர் அவர்களை புரிந்துகொண்டு நடக்கும் காலமாகும். இவர்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எதிரிகள் தொல்லை விலகக் கூடிய காலமாக இருக்கிறது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். உணவு விஷயங்களில் நல்ல மாற்றமும் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். செல்வ வளம் உண்டாகக்கூடிய அற்புதமான மாதமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







