ஷடாஷ்டக யோகத்தால் திடீர் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் கிரகங்களுடைய நிலை 150° ஆக இருக்கும்போது, அதை 'ஷடாஷ்டக யோகா' என்று சொல்வார்கள். இந்த யோகமானது ஒரு கிரகமானது ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் இருக்கும் பொழுது ஏற்படக்கூடியதாக இருக்கிறது.
சூரியனுடன் சனி பகவானால் இப்பொழுது உருவாகும் ஷடாஷ்டக யோகா மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தையும் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் தேடி கொடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக இந்த யோகத்தால் மிகப்பெரிய பலன் அடையப்போகும் அந்த ராசியினர் யார் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசியினருக்கு ஷடாஷ்டக யோகம் அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக அவர்கள் சந்தித்த துன்பத்திலிருந்து விடுபடக்கூடிய அற்புதமான காலமாக அமையப்போகிறது. கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் ஆதரவும் கிடைத்த பெற போகிறார்கள். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக அவர்கள் ஒரு மிகப்பெரிய அளவில் முக்கியமான முடிவு எடுக்கக் கூடிய நிலை உருவாகப் போகிறது.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு ஷடாஷ்டக யோகம் அவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. தொழிலில் கூட்டாளிகளுடன் இவர்கள் ஒரு சிறந்த நட்பை பகிர்ந்து கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றத்தை பெறப் போகிறார்கள். உடன் பிறந்தவர்களால் இவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக குறைபாடுகளை சந்தித்து வந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் பெறக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது.
கன்னி:
கன்னி ராசியினருக்கு ஷடாஷ்டக யோகம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பாதையை உருவாக்கப் போகிறது. திடீர் அதிர்ஷ்டம் இவர்கள் கதவுகளை தட்டி இவர்களை முன்னேற்ற பாதையை நோக்கி கூட்டிச் செல்லப் போகிறது. இவர்களுடைய ஆளுமை திறன் மிக முழுமையாக வெளிப்பட்டு முன்னேற்றத்தை அடையப் போகிறார்கள். பொருளாதார ரீதியாக நீண்ட நாட்களாக சில சிக்கல்களை சந்தித்து வந்த கன்னி ராசியினருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு உருவாக போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |