7 நாள் சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்
முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் மகா கந்தசஷ்டி விரதம் மிக மிக முக்கியமான விரதமாக பக்தர்கள் இடையே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி திதி முக்கியமானதாக இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மகாகந்த சஷ்டி ஆனது பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்து விரதம் இருந்து முருகப்பெருமானுடைய அருளை பெறுவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் விழாவாகவும் இருக்கிறது.
அப்படியாக இந்த மகா கந்த சஷ்டி விழாவிற்கு பக்தர்கள் பல்வேறு விதமான முறையில் அவர்களுடைய வேண்டுதல்களை வைப்பார்கள். இதில் ஒரு சில பக்தர்கள் 48 நாட்கள் விரதம் தொடங்கி தங்களுடைய வேண்டுதலை வைப்பார்கள்.

சிலர் 21 நாட்கள் என்றும் இன்னும் சிலர் ஏழு நாட்கள் என்று அவரவர் வசதிகளுக்கு ஏற்ப தங்களுடைய விரத முறைகளை கடைப்பிடித்து முருகப்பெருமானை சரணடைந்து தங்களுடைய பிரார்த்தனையை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் ஒரு சிலருக்கு ஏழு நாட்கள் கூட விரதம் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அவர்கள் கவலை கொள்ளாமல் முருகப்பெருமானுக்கு இந்த முறையில் விரதம் இருந்தாலும் அவர்கள் 7 நாட்கள் நாம் விரதம் இருந்த பலனை பெறலாம்.
ஏழு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி திதி வரும் சூரசம்ஹார நாளான அக்டோபர் 27ஆம் தேதி அன்றைய ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானுடைய அருளை பெறலாம்.
இதற்கு இவர்கள் அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலைகளில் எழுந்து குளித்து வீட்டில் முருகப்பெருமானுடைய திருஉருவப்படத்திற்கு முன்பு விளக்கேற்றி அவருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள் படைத்து தங்களுடைய விரதத்தை தொடங்க வேண்டும்.
அன்றைய நாள் முழுவதும் விரதம் கடைப்பிடிப்பவர்கள் கட்டாயமாக கடைபிடிக்கலாம் இல்லை உடல்நிலை காரணம் கொண்டு அவர்கள் விரதம் இருக்க முடியாது என்றால் பால் பழம் சாப்பிட்டுக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அவ்வாறு விரதம் இருக்க முடியவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானை மனதில் நினைத்துக் கொண்டு மௌன விரதம் கூட அவர்கள் மேற்கொள்ளலாம். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த விரதமாக அன்றைய நாள் நமக்கு அமையும். பிறகு அன்றைய நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யக்கூடிய சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதை முடிந்தவர்கள் ஆலயம் சென்று நேரில் தரிசிக்கலாம் முடியாதவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அந்த நிகழ்வை பார்த்து தரிசித்து நாம் வழிபாடு செய்யலாம். அதோடு சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு கட்டாயம் அவர்கள் தலைக்கு குளிக்க வேண்டும்.
அதோடு முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி பால் அல்லது சாதம் பிறருக்கு தானமாக கொடுத்து நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டாம். இவ்வாறு அன்றைய நாள் விரதத்தை கடைபிடித்து நிறைவு செய்யும் பொழுது கட்டாயமாக மனதில் ஒரு மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும். அதோடு முருக பெருமானுடைய அருளால் வாழ்க்கையில் அடுத்தடுத்து நாம் வளர்ச்சியை சந்திக்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |