2026-ல் சனியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமானாக இருக்கக்கூடியவர் ஒருவர் உடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் இருந்து விட்டால் அந்த ஜாதகர் மிக உயர்ந்த நிலையை பெற்று விடுவார். அப்படியாக சனிபகவான் மற்றும், குருபகவான், மீன ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் நன்மைகளையும் தீமைகளையும் வழங்க இருக்கிறார்.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு சனிபகவான் எந்த மூன்று ராசிகளுக்கு நன்மை தீமையை வழங்கி அவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு சனி பகவானுடைய தாக்கம் 2026 ஆம் ஆண்டு இவர்களுக்கு தொழில் ரீதியாக சில சவால்களை கொடுப்பார். தொழில் ரீதியாக ஒரு சிலருக்கு மன உளைச்சல் உண்டானாலும் இவர்கள் கூடவே சில முன்னேற்றத்தையும் அடைவார்கள். இவர்களைப் பற்றி இவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சவாலான ஆண்டாக இருந்தாலும், இவர்களைப் புரிந்து கொண்டு இவர்களை முன்னோக்கி செல்லக்கூடிய பாதையில் இவர் மிகத் தெளிவான முறையில் செல்வார்கள். சுற்றி உள்ளவர்களுடைய உண்மை முகத்தை அறிந்துகொண்டு பழகக் கூடிய வாய்ப்பை சனி பகவான் கொடுக்க போகிறார்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சனி பகவானுடைய தாக்கம் ஆனது 2026 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக ஒரு முக்கிய முடிவை எடுக்ககூடிய ஆண்டாக அமையப் போகிறது. இவர்கள் பெற்றோர்கள் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். முன்பை விட இவர்கள் எதிர்பார்த்த செல்வாக்கு கிடைக்கப்பெற்றாலும் மனதில் பதட்டம் இவர்களுக்கு காணப்படும். திருமண பந்தத்தில் இவர்களுக்கு நல்ல புரிதல் உண்டாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை விலகி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய அமைப்பை சனி பகவான் கொடுப்பார்.
மீனம்:
மீன ராசியினருக்கு சனிபகவானுடைய தாக்கமானது அவர்கள் வாழ்க்கையில் சில முக்கிய பொறுப்புகளை கொடுக்கப் போகிறது. இவர்களுடைய இலக்குகளை நோக்கி இவர்கள் முன்னேறி செல்லக்கூடிய பாதையை சனி பகவான் கொடுக்கப் போகிறார். வாழ்க்கையில் புதிய பயணம் இவர்களுக்கு சனி பகவானால் தொடர போகிறது. ஒரு சிலர் தன்னை அறிந்து ஒரு புதிய பரிமாணத்தை எடுக்கக்கூடிய அற்புத ஆண்டாக இருக்கப் போகிறது. நண்பர்கள் வட்டாரம் விரிவடையும் நண்பர்களால் ஆதாயம் நண்பர்களால் பண உதவிகள் கிடைக்கப் போகிறார்கள். எதிரிகள் தொல்லை மற்றும் பண விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையப்போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |