குரு பெயர்ச்சி- கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டிய 4 நட்சத்திரங்கள்
நவக்கிரகங்களில் குரு பகவான் சுப கிரகங்களாக இருக்கிறார். குரு பகவானின் அருள் ஒரு மனிதனுக்கு கிடைத்து விட்டால் அந்த மனிதன் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைந்து விடுவார். அப்படியாக 2025 அக்டோபர் குரு பகவான் வக்ரமாக உள்ளார்.
இதனால் சில ராசிகளுக்கு நற்பலன்கள் இருந்தாலும் குருபகவானுடைய பார்வை ஒரு சில வீட்டின் அமைப்புகளை பாதிக்ககூடும் என்கிறார்கள். குறிப்பாக 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களை குருபகவான் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதனால் இந்த நட்சத்திரங்களை சேர்ந்தவர்கள் கட்டாயம் பரிகாரங்கள் செய்தால் அவர்களுக்கு குரு பகவான் உடைய தாக்கங்கள் குறைந்து நற்பலன்களை பெறலாம். அதைப் பற்றி பார்ப்போம்.
கன்னி ராசி- உத்திரம்:
குருபகவான் மிதுன ராசியில் இருக்கும் பொழுது உத்திர நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் அவர்களுக்கு சில சங்கட்டமான நிலை உருவாகலாம். அதாவது வேலை மற்றும் உடல் நிலையில் சில உபாதைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற அரிசி தானம் செய்யலாம்.
அல்லது வியாழக்கிழமை குருஹோரையில் காலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலான நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு குரு பகவான் உடைய தீய தாக்கங்கள் குறையும்.
கன்னி ராசி- ஹஸ்தம்:
ஹஸ்தம் நட்சத்திரம் சேர்ந்தவர்களுக்கு குரு பகவான் எட்டாம் வீட்டில் இருப்பதால் இவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகளும் மன அழுத்தம் போன்றவை உருவாகலாம். ஆதலால் இவர்கள் வியாழக்கிழமை காலையில் ஸ்ரீராமர் மந்திரத்தை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.
அதோடு அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூவியும் வழிபாடும் மேற்கொள்ளலாம். கூடுதலாக பசுவிற்கு கடலைமாவு அல்லது வாழைப்பழ தானம் செய்வது இவர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.
துலாம் ராசி - சித்திரை:
துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு குரு பகவான் 12ஆம் வீட்டை பார்க்கிறார். இதனால் இவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கக்கூடும். உறவுகளில் கருத்து வேறுபாடு உண்டாக்கலாம்.
எதிர்பாராத செலவுகளை இவர்கள் சந்திக்ககூடும் என்பதால் இவர்கள் குரு பகவானுடைய குரு பீஜ மந்திரம் ஆகியவற்றை 108 முறை வியாழக்கிழமை பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். அதோடு இவர்கள் கோவிலில் மஞ்சள் தானம் செய்வதும் சிறந்த பலன் கிடைக்கும். வியாழக்கிழமை அன்று இவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வருவதும் நற்பலன்களை கொடுக்கும்.
விருச்சிகம் ராசி- விசாகம்:
குரு பகவான் விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறாம் வீட்டை பார்க்கிறார். அதனால் இவர்களுக்கு உடல்நிலை பிரச்சினை, கடன் தொல்லை அதிகரிப்பு போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் இவர்கள் வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையை அணிந்து குரு ஹோமம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதோடு கோவிலில் மஞ்சள் நிற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். பசுவிற்கு மஞ்சள் கலந்த உணவுகளை தானம் கொடுக்கலாம்.
பொது பரிகாரங்கள்:
மேலும் 12 ராசிகளும் 27 நட்சத்திரக்காரர்களும் குருபகவானுடைய குரு பெயர்ச்சியின் தாக்கம் குறைந்து நல்ல பலன்களை பெற அவர்கள் வியாழக்கிழமை குரு பீஜ மந்திரம் அல்லது "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்வது இவர்களுக்கு மிகச்சிறந்த பலன் அளிக்கும். கூடுதலாக பெருமாள் கோயில்களுக்கு வியாழக்கிழமை சென்று அர்ச்சனை செய்து வழிபாடும் செய்தாலும் நல்ல பலன்களை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







