2025 ஓணம் பண்டிகை எப்பொழுது: 10 நாட்கள் கொண்டாடுவது ஏன் தெரியுமா?
இந்தியாவில் பல பண்டிகைகள் இருக்கிறது. அதில் முக்கியமான பண்டிகை ஓணம் ஆகும். இந்த பண்டிகை ஆனது ஆவணி மாதத்தில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் கேரளாவில் சிம்ம மாதம் என்று அழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு சிம்ம மாதம் தான் முதல் மாதமாகும்.
இந்த பண்டிகை கேரளாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியாக இந்த பண்டிகையின் விசேஷங்களும் இதற்கு பின்னால் இருக்கும் புராணங்கள் பற்றி பார்ப்போம். கேரள மக்களின் அறுவடை திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை தான் இந்த பணம் பண்டிகை.
இந்த பண்டிகை கேரளாவில் உள்ள மக்கள் மட்டும் இல்லாமல் உலகம் எங்கிலும் வாழும் கேரள மக்கள் இந்த பண்டிகை கொண்டாடுவதை தவறுவதில்லை. மேலும் அறுபடை காலத்தில் தொடக்கமாக இந்த பண்டிகை சுமார் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகைகள் முக்கிய நிகழ்வாக 64 வகையான ஓணம் சத்தியா விருந்து, படகு போட்டிகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த பண்டிகையை ஆவணி மாதத்தில் மாதத்தில் வரக்கூடிய திருவோணம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதாவது அஸ்தம் நாளில் துவங்கி திருவோணம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை தொடர்ந்து கொண்டாடப்படும். இதில் இறுதி நாளான திருவோண நட்சத்திரம் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி செப்டம்பர் 5 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. புராணங்கள் படி கேரளாவை ஆண்டு வந்த அசுர மன்னன் மகாபலி தனது ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்காக மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்.
இந்த யாகத்தை ஒரு வேளை அவன் வெற்றிகரமாக முடித்து விட்டால் இந்திரலோகமே அவனுக்கு வசப்படும் நிலை உருவாகும். இதனால் தேவர்கள் அனைவரும் பயத்தில் மகாவிஷ்ணுவை முறையிடுகிறார்கள். அவர்களுடைய வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு 3டி உயரம் குள்ளமான வாமன வடிவம் எடுத்து மகாபலி மன்னன் யாகம் நடத்தும் இடத்திற்கு வருகிறார்.
அரச நியதிப்படி யாகம் நடத்தும் சமயத்தில் யாரேனும் வந்து யாசகம் கேட்டால் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். இதை அறிந்து வாமன வடிவம் எடுத்து வந்த மகாவிஷ்ணு மகாபலி மன்னரிடம் தனக்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்கிறார்.
அதை ஏற்றுக்கொண்ட மகாபலி மன்னனும் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆக திரிவிக்ரமனாக உருவெடுத்து முதல் அடியில் வானத்தையும், இரண்டாவது அடியில் பூமியையும், மூன்றாவது அடியை அளப்பதற்கு இடமில்லாததால் தன்னுடைய கால்களை வைத்து மகாபிலியின் தலைமீது அவரைப் பாதாள லோகத்திற்கு அழுத்தி அனுப்பினார்.
அதேசமயம் மகாபலிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மக்களை காணும் வரமும் அளிக்கிறார். மகாவிஷ்ணு மகாபலிக்கு அளித்த வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காண மகாபலி பூமிக்கு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று வருகிறார்.
அன்று தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னனை வரவேற்பதற்காக மக்கள் வீடுகளில் பூக்கோலம் இட்டு விதவிதமாக உணவு சமைத்து பரிமாறி கொண்டாடுவார்கள். இந்த நிகழ்வை போற்றும் விதமாக தான் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







