சனிப்பெயர்ச்சியால் துன்பத்தை அனுபவிக்கும் 5 ராசிகள்: பரிகாரம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார். அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.
அந்த வகையில் தற்போது நிகழ்ந்துள்ள சனி பெயர்ச்சியால் ஐந்து ராசிகளுக்கு அசுப தாக்கம் இருக்கும்.
அந்தவகையில் சிம்மம் மற்றும் தனுசு ராசிகளில் பிறந்தவர்கள் சனி தசையால் பாதிக்கப்படுவார்கள், மேலும் மேஷம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் தாக்கத்தால் பாதக பலன்களை அனுபவிக்க நேரிடும்.
குறித்த ஐந்து ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்கள் சனியின் மோசமான தாக்காதால் இருந்து விடுப்படவும் சனிபகவானின் உக்கிரத்தை குறைக்கவும் என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
சொத்து சம்பந்தமான விடயங்களில் பிரச்சிகைகள் ஏற்படும். நிதி ரீதியில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்.
உடல் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், உணவு முறையில் சிறப்பு கவனம் தேவை.
சிம்மம் - சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சனி தசை ஆரம்பமாகியுள்ளது.இந்த காலப்பகுதியில், உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
உறவுகளில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்க வாக்குவாதங்கலை தவிர்த்துக்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். முடிவெடுப்பதில் அதிக நிதானம் தேவை.
தனுசு - தனுசு ராசியில் பிறந்தவர்கள் நிதி ரீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.
தொழிலில் வெற்றியடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் வகையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கும்பம் - கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.
பணவிடங்களில் முடிவுகளை எடுக்கும் முன்னர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நிதி நெருக்கடிகள் ஏற்பம அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
சமூகத்தில் உங்களின் அந்தஸ்து குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உடல்நலம் மோசமடையக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீனம் - மீன ராசியில் பிற்நதவர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் சற்று வீரியமாக இருக்கும்.மன ரீதியில் குழப்பங்கள் மற்றும் வேதனைகள் அதிகரிக்கும்.
படிப்பில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதுடன் கல்வியில் நாட்டம் குறையும். நிதி நிலை மோசமாக பலவீனமடையும்.
பரிகாரங்கள்
மீன ராசியினர் ஏழரை சனி தாக்கம் குறைய சனிக்கிழமை அன்று ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை எடுத்து, அதில் உங்கள் முகத்தைப் பார்த்து, அந்த எண்ணெயை கோவிலுக்கு தானமாக கொடுப்பது சனிபனவானின் கோபத்தை குறைக்கும்.
ஏனைய 4 ராசியினர் சனிக்கிழமை அன்று அனுமனை வணங்கி வந்தால், வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழி பிறக்கும்.
மேலும், சனிக்கிழமை அரச மரத்தின் முன் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. இந்த பரிகாரம் செய்வதன் மூலம் ஏழரை சனியின் தாக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது.