மகாளய பட்சத்தில் நடக்கும் சனியின் வக்ர பெயர்ச்சி- இந்த 3 ராசிகளுக்கு இனி கவலை இல்லை
ஜோதிடத்தில் இந்த 2025 ஆம் ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கியது இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த நாளில்தான் சனிபகவான் வக்ர நிலையில் பயிற்சி அடைகிறார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய பட்ச நாளில் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பது ஒரு அறிய நிகழ்வாகும்.
அதோடு இந்த வருடம் சந்திர கிரகணம் சனியின் ராசியில் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வும் சில ராசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த சனியின் வக்ரப் பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை வாழ்க்கையில் கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி இவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை மிக தைரியமாக எடுக்கத் தூண்டும். நீண்ட நாட்களாக மனதில் பயம் கொண்டிருந்த விஷயத்தை அவர்கள் உடைத்து முன்னேற காத்திருக்கிறார்கள். பொருளாதார சிக்கலில் தவிப்பவர்களுக்கு சனிபகவானுடைய அருளால் அவர்களுக்கு கடன் தொல்லை மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த சிரமங்கள் அனைத்தும் விலகப் போகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு சனியின் வக்ர பயிற்சி அவர்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. சிலருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் வேலையில் நல்ல மாற்றமும் பெயரும் பெறுவார். பிள்ளைகளால் உங்களுக்கு சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும் காலம் ஆகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அவர்கள் தொழிலில் நல்ல லாபத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. சமுதாயத்தில் அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கப் போகிறது. உறவுகளில் சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் உருவாக போகிறது. நிலம் தொடர்ப பிரச்சனைகள் இவர்கள் சந்தித்து வந்தார்கள் என்றால் அந்தப் பிரச்சனைகளில் இருந்து இவர்களுக்கு விடுதலை கிடைக்கும் காலமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







