ஒருவருக்கு திருமண தாமதம் ஏன் நடக்கிறது- காரணம் தெரியுமா?
மனிதர்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை காலம் கடந்த பிறகு தேடி செல்வார்கள். அதில் ஒன்றுதான் ஜோதிடர்கள். அதாவது சிலர் ஆரம்ப காலகட்டத்தில் ஜோதிடத்தை நம்புவதில்லை. காலம் கடந்து துன்பமும் தலைக்கு மீறி சென்ற பிறகு அவர்கள் சரி நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு சிக்கலாக இருக்கிறதே, ஜோதிடத்தை பார்த்தாவது நாம் நம் வாழ்க்கை சரி செய்து கொள்ள முடியுமா என்று அவர்கள் ஜாதகத்தை தேடி எடுத்துக்கொண்டு ஜோதிடரை பார்க்க செல்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவருக்கு வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் இருக்கும், நல்ல வேலை இருக்கும். ஆனால் அவர்களுக்கு திருமணம் என்பது தாமதம் ஆகிக்கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும்.
அதாவது நல்ல அழகு இருந்தாலும் படிப்பு இருந்தாலும் குடும்பம் இருந்தாலும் திருமண வரன் பார்க்கும்பொழுது அவை ஒரு நல்ல முடிவை பெறாது. அந்த வகையில் ஒருவருக்கு திருமண தாமதம் ஏன் நடக்கிறது? ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
ஜோதிடத்தில் சனி பகவான் யாருடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அவர்கள் திருமண தாமதத்தை சந்திக்க நேரிடும். மேலும், இவர்கள் முதல் காலகட்டத்தில் திருமணத்தில் சில தடைகளும் தாமதங்களும் சந்தித்தாலும் சனி பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்து இருப்பதால் அவர்களுக்கு நிலையான திருமண வாழ்க்கையை தாமதமானாலும் அமைத்துக் கொடுப்பார்.
அதோடு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இல்லாமல் இருந்தாலும் திருமண தாமதம் திருமணம் நடந்தாலும் சிக்கல்கள் போன்று நிலை உருவாகும். அதுவே பெண் ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் செவ்வாய் பலம் இல்லாமல் இருந்தாலோ அல்லது பாவ கிரகங்களோடு இணைந்து இருந்தாலோ அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் தாமதம் அல்லது சிக்கல்கள் உண்டாகும்.
இவை அனைத்தையும் சரி செய்வதற்கான பரிகாரங்கள் நமக்கு நம்முடைய முன்னோர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள். அதை நாம் செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் கிரகங்களால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும் என்பது நம்பிக்கை. அப்படியாக இவ்வாறான அமைப்புகளுக்கு நாம் சரணடைய வேண்டிய ஒரு தெய்வம் சிவபெருமான். காரணம் சிவபெருமான் தான் பாவங்களை அழித்து, கர்ம வினைகளை போக்கி, தோஷங்களை விலக்கக்கூடியவர்.
திருமண தாமதம் சந்திப்பவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்யத் தொடங்க வேண்டும். அதோடு சிவபெருமானுடைய மந்திரங்களை பாராயணம் செய்தல் வேண்டும். தொடர்ந்து சிவன் வழிபாடும் சிவன் மந்திரங்களும் நாம் பாராயணம் செய்து வரும் பொழுது ஜாதக ரீதியாகவும் சரி உள்ள தோஷம் நம்முடைய பிரார்த்தனை முன் ஒன்றும் இல்லாமல் ஆகும் நிலை உருவாகும்.
கூடுதலாக தான தர்மங்களை செய்தல் வேண்டும். நவகிரக பூஜைகள் ஆலயங்களில் செய்ய வேண்டும். இவை அனைத்தும் நாம் முறையாக இறைவனிடம் ஜாதகத்தில் என்னுடைய தோஷங்கள் விலக வேண்டும் எனக்கு ஒரு நல்ல இல்லற வாழ்க்கையை கொடுத்து அருள வேண்டும் என்ற மனதார பிரார்த்தனை செய்ய தொடங்கும்போது இயல்பாக நம்முடைய கிரக தாக்கங்கள் குறைந்து நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான வழி பிறக்கும். இறைவழிபாட்டில் சாத்தியம் இல்லாத காரியம் என்று எதுவும் இல்லை.
ஓம் நமசிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







