சந்திர கிரகணத்தால் இந்த 4 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
இந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் நிகழ்வுள்ளது. கும்ப ராசியில் நிகழ இருப்பதால், இதனால் சில ராசிகளுக்கு சில பாதிப்புகள் உருவாகலாம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கும்பம்:
சந்திர கிரகணம் நாளில் கும்ப ராசியினர் செய்யும் வேலையில் நிதானம் கடைபிடிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உடலில் சில சங்கடங்கள் வரலாம். சரியான நேரத்தில் தூங்குவதாலும் சாப்பிடுவதாலும் ஆரோக்கிய பிரச்சனையை தவிர்க்கலாம். மன அழுத்தம் உண்டாகாமல் பார்த்து கொள்வது நல்லது. நெருங்கிய உறவுகளிடம் மனம் திறந்து பேசுங்கள்.
விருச்சிகம்:
இவர்களுக்கு நான்காம் இடத்தில் கிரகணம் நிகழ உள்ளதால் கல்வியில் மாணவர்கள் மந்த நிலையில் காணப்படுவார்கள். சொத்து விற்பனை, இடம் வாங்குவது போன்ற நிகழ்வுகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இவர்கள் தேவை இல்லாத மன பதட்டத்துடன் செயல்படக்கூடிய காலகட்டமாகும். முடிந்து வரை மனதையும் உடலையும் தற்காத்துக் கொள்வதற்கு நல்ல உணவும், தூக்கமும், இறை வழிபாடும் மேற்கொள்வது நன்மையை தரும்.
கடகம்:
சந்திர கிரகணத்தால் கடக ராசியினர் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் நீங்கள் மனபதட்டத்துடன் பேசுவதால் சில பிரச்சனைகளை சந்திக்கப்படும். உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் சில சங்கட்டங்கள் உருவாகலாம். சிலருக்கு தலைவலி போன்ற உடல் உபாதைகள் உருவாகும். அதனால் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
மீனம்:
சந்திர கிரகணத்தால் மீன ராசியினருக்கு மறைமுக எதிரிகளால் சில தொல்லைகள் உருவாகலாம். வீடுகளில் தேவையில்லாத பிரச்சனைகளும் செலவுகளும் வரலாம். மிக மிக கவனமாக இருக்க வேண்டிய நாள். இவர்கள் குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்தால் மட்டுமே இவர்களுக்கு வரக்கூடிய சங்கடத்தை இவர்கள் சரி செய்ய முடியும். சிலருக்கு பிள்ளைகள் வழியால் ஏதேனும் மன கவலைகள் வரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







