2025 விநாயகர் சதுர்த்தி எப்பொழுது? வழிபாடு செய்ய சிறந்த நேரம் எது?
நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யாமல் அதை தொடங்குவதில்லை. விநாயகரின் அருளை பெறாமல் தொடங்கும் காரியம் எதுவும் வெற்றிகரமாக முடிவதில்லை என்பது காலம் காலமாக நம்முடைய நம்பிக்கையாகmஇருந்து வருகிறது.
அந்த வகையில் விநாயகர் பிறந்த தினத்தை நம் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி எப்பொழுது என்று பார்ப்போம்.
ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகளையும் தாமதங்களையும் அகற்றி ஆசிர்வாதம் வழங்க கூடியவர் விநாயகர். இவர் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர். அப்படியாக இவர் ஆவணி மாதம் வளர் பிறை சதுர்த்தி அன்று அவதரித்தார் என்பது புராணம்.
சதுர்த்தி என்பது திதிகளில் நான்காவது திதியாக வரக்கூடியது. அதனால் இந்த சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன் கிழமை அன்று வருகிறது.
அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதி பகல் 2.22 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி பகல் 3.52 வரை சதுர்த்தி திதி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 27ஆம் தேதி பகல் 11 மணி முதல் 1.40 மணி வரை எந்த நேரத்திலும் நாம் விநாயகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.
அன்று மாலை சதுர்த்தி திதி இருக்காது என்பதால் காலை முதல் பகல் வரையிலான நேரத்திற்குள் விநாயகப் பெருமானின் வழிபாட்டை செய்து கொள்வது சிறந்ததாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







