சதய நட்சத்திரத்தில் ராகு- 2026 ஆம் ஆண்டு எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்?
ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக இருக்கக் கூடியவர். இவர் ஒரு மாயை அகற்றுபவர் என்றே சொல்லலாம். மேலும், ராகு எவ்வாறு செயல்படுகிறார் என்றால் நாம் உண்மை என்று நினைத்து மாயை உலகில் வாழும் அந்த விஷயத்தை உடைத்து அவர் நமக்கு உண்மை நிலையை அறிய செய்யக்கூடியவர் .
மேலும் 2025 ஆம் ஆண்டுநவம்பர் 23 தேதி அன்று ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியானது ஒரு மிகப்பெரிய ஆன்மீக தாக்கத்தையும் ஜோதிட தாக்கத்தையும் உருவாக்குகிறது.
இதனால் நிறைய நபர்கள் அவர்கள் மாயையில் இருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டம் ஆகும். அப்படியாக ராகு பகவானுடைய இந்த நட்சத்திர மாற்றத்தால் எந்த ராசிகள் வருகின்ற 2026 தொடக்கத்திலிருந்து மிகவும் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் நீண்ட நாட்களாக அவர்களுடைய தொழில் வாழ்க்கையில் தங்களுக்கான அங்கீகாரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆக இவர்கள் இந்த காலகட்டங்களில் இவர்களுடைய முயற்சிகளையும் இவர்களுடைய வேலையையும் இவர்கள் பல முறை பரிசீலனை செய்து தங்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும் இவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முதல் ஒரு நல்ல நட்பின் வழியாக இவர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்கான சாத்தியங்களை பெறுகிறார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்க போகிறது. அதாவது இத்தனை நாள் அவர்கள் தங்களுடைய மனதில் கட்டி வைத்திருந்த நம்பிக்கைகள் மற்றும் அவர்களுடைய சிந்தனை மற்றும் உலக பார்வையை மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு ஆண்டாக அமையப்போகிறது. அதாவது இந்த 2026 ஆம் ஆண்டு இவர்கள் தங்களை உணரக்கூடிய ஒரு அற்புதமான ஆண்டு. இவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்களா அல்லது பிறருடைய வழி நடத்துதலால் அவர்கள் வாழ்கிறார்களா என்ற ஒரு உண்மையை புரிந்து கொள்ளப் போகிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு இவர்களை உணரச் செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கப் போகிறது. இவர்கள் எதற்காக வாழ்கிறார்கள்? பிறருடைய பாராட்டத்தலை பெறவா? இல்லை தங்களுடைய மன மகிழ்ச்சிக்காக எல்லா வேலையும் செய்கிறார்களா என்ற ஒரு மிகப்பெரிய கேள்விகளுக்கு இவர்கள் விடை தேடிக் கொள்ளப் போகிறார்கள். ஆதலால் துலாம் ராசியினர் இந்த 2026 ஆம் ஆண்டு இவர்கள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு அவர்களுடைய மன மகிழ்ச்சிக்காக பிறகு என்ன சொல்வார்கள் என்ற தயக்கத்தை விடுத்து வாழ போகும் ஒரு அற்புதமான காலமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |