2026: வெற்றிகள் குவிய 12 ராசிகளும் செல்ல வேண்டிய முக்கியமான கோவில்கள்
2026 மிகச் சிறப்பாக பிறந்திருக்கிறது, இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லா சௌபாக்கியங்களும் கிடைத்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் ஜோதிட ரீதியாக 2026 ஆம் ஆண்டு முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ இருக்கிறது. இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் உண்டாகும்.
அதாவது சனிபகவான் மற்றும் ராகு கேது பெயர்ச்சியால் மிகப்பெரிய மாற்றங்களை இந்த ஆண்டு சில ராசிகள் சந்திக்கப் போகிறார்கள். அந்த வகையில் என்னதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு பக்கம் வர இருக்கிறது என்றாலும் இன்னொரு பக்கம் வர இருக்கின்ற சிறு சிறு துன்பங்களையும் தகர்த்து நிம்மதியோடு வாழ 12 ராசிகளும் 2026 செல்ல வேண்டிய முக்கியமான கோவில்களை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
இந்த ஆண்டு அவர்களுடைய மனக்குழப்பங்கள் மற்றும் மன பயம் விலக திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரரை சென்று வழிபாடு செய்து கிரிவலம் வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை நல்ல மாற்றம் பெறும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கிறது. பொருளாதாரம் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது என்றாலும் இவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு தடைகள் வர வாய்ப்புகள் இருப்பதால் இவர்கள் கஞ்சனூர் அக்னிஸ்வரர் அதாவது சுக்கிரன் தலமான அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தால் தடைகள் யாவும் விலகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு வேலை மற்றும் தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் வர இருந்தாலும் சில குழப்பங்களும் நிகழ இருக்கிறது. அதனால் இவர்கள் அதில் இருந்து விடுபட திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நல்ல பலன் பெறலாம்.
கடகம்:
கடக ராசியினருக்கு அஷ்டம சனியின் தாக்கம் விலகி நிம்மதியான காலம் மற்றும் ஆரோக்கிய முன்னேற்றம் பெறுவதற்கு திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் (நண்டு கோயில்) வழிபாடு செய்வது அவசியம். அப்பொழுது அவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த 2026 ஆம் ஆண்டு சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் உயர் பதவிகளும் அந்தஸ்து கிடைக்க இருந்தாலும் இவர்களுக்கு அவ்வப்போது வியாபாரத்தில் ஒரு சில குழப்பங்கள் வர இருப்பதால் மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மனை வழிபாடு செய்து அதோடு சோழவந்தான் பிரத்தியங்கிரா தேவி ஆலய வழிபாடும் செய்தால் இவர்கள் நல்ல மாற்றம் பெறுவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு கண்டக சனி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இவர்கள் கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கக்கூடிய ஆண்டாளை தரிசனம் செய்தும் திருச்சி ஸ்ரீரங்கநாதரின் வழிபாடு செய்தால் மன அமைதி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வந்த அவமானங்களையும் இழந்த செல்வாக்கையும் மீண்டும் பெறுவதற்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கப்போகிறது. இருப்பினும் மன பயம் மனதில் இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மை விலக இவர்கள் திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இந்த ஆண்டு எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் மிகுந்த நிதானத்தோடு செய்ய வேண்டும். சனிபகவானுடைய பாதிப்புகள் குறைய இவர்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம் அல்லது குற்றாலத்தில் வீற்றிருக்கக்கூடிய குற்றாலநாதரை வழிபாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசியினர் சனி பாதிப்பில் இருந்து முழுமையாக விடுதலை பெறப்போகிறார்கள். அதனால் இவர்களுக்கு குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் எல்லாம் மீண்டும் மகிழ்ச்சியாக தொடங்க இருக்கிறது. இவர்கள் இன்னும் சிறப்பான வாழ்வை பெற ஆலங்குடி குரு தலம் சென்று தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபாடு செய்தால் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம்:
இவர்கள் தொழில் ரீதியாக நல்ல உச்சத்தை தொடக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது.அதனால் இவர்களுக்கு எதிரிகளிடமிருந்து இவர்களை பாதுகாத்துக் கொள்ள திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினர் அவ்வப்போது ஒரு மந்தமான நிலையில் காணப்படுவார்கள். இவர்களுடைய சோம்பலை நீக்குவதற்கு இவர்கள் சோளிங்கர் யோக நரசிம்மரை வழிபாடு செய்யலாம் அல்லது இவர்கள் ஊரில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் நல்ல பலன்களை பெறலாம்.
மீனம்:
மீன ராசிக்கு ஜென்ம சனி மற்றும் ராகு கேது ஆதிக்கத்தால் சில மன குழப்பங்கள் மனக்கவலைகள் வரலாம், அதனால் இவர்கள் குடும்பத்தில் அமைதி உண்டாக பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம் அல்லது சிதம்பரத்தில் இருக்கக்கூடிய நடராஜர் ஆலயம் என்று வழிபாடு செய்தால் நல்ல ஆண்டாக இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |