2026: ஆடி 18 மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Jul 24, 2026 02:00 PM GMT
Report

 ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி 18 மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாளாக ஆடி 18 இருக்கிறது அந்த வகையில் ஆடி பதினெட்டாம் தேதி அன்று நான் முக்கியமாக சில தவறுகள் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது அதைப்பற்றி பார்ப்போம்.

1. ஆடி 18 அன்றைய நாளில் தேவை இல்லாத நீரை அளவிற்கு அதிகமாக செலவு செய்தல் கூடாது. காரணம் அன்றைய தினம் முப்பெரும் தேவியர் நீரில் வாசம் செய்யும் நாள்.

2.  ஆடி பதினெட்டாம் தேதி அன்று நாம் தவறியும் கடன் வாங்குவது அல்லது பிறருக்கு கடன் கொடுப்பது கூடாது. ஆடி பதினெட்டு நாம் என்ன விஷயங்கள் செய்கின்றோமோ அதுதான் அந்த நாளில் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

2026: ஆடி 18 மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.. என்ன தெரியுமா? | 2026 5 Mistakes We Shouldnt Do On Aadi 18

ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?

ராஜ வாழ்க்கை வழங்கும் குரு சுக்கிரன் சேர்க்கை.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?

3. அதைப்போல், எந்த காரணத்தை கொண்டும் வீட்டை பூட்டி விட்டு மாலை நேரத்தில் எங்கும் செல்லக்கூடாது. ஆடி பதினெட்டாம் தேதி அன்று மகாலட்சுமி வீட்டிற்கு வருவதாக சொல்லப்படுகிறது. வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது அவசியம்.

4. ஆடி 18 ஆம் தேதி அன்று தாலி கயிறு மாற்றும் பொழுது அந்த தாலி கயிற்றை நம்முடைய கால்களில் படும் படி செய்தல் கூடாது, அதேபோல் குப்பையில் போடுவதும் கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

5. மறந்தும் ஆடி 18 ஆம் தேதி அன்று அசைவம் உணவு சாப்பிடுவதும் சமைப்பதும் தவிர்க்க வேண்டும். இந்த நாள் நீர் வழிபாட்டிற்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் ஆன்மீக நாளாக உள்ளது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US