2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கக்கூடிய ஆண்டாளுக்கும் பார்வதியின் அம்சமாக இருக்கும் இருவருக்கும் உற்சவங்கள் நடைபெறுகிறது.
ஆண்டாள் மற்றும் அம்பாள் உடைய முழு அருளை பெறுவதற்கும் அவர்களுடைய அருள் நிறைந்த இந்த ஆடிப்பூரம் அன்று பெண்கள் அவர்களுடைய குடும்பத்தின் நலனுக்காக, அமைதிக்காக சிறப்பு வழிபாடு செய்வது அவசியம்.
அந்த வகையில், இந்த 2026 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. ஆண்டாள் அல்லது அம்மன் தரிசனம் செய்யுங்கள்:
ஆடிப்பூரம் அன்று அருகில் இருக்கக்கூடிய ஆண்டாள் அல்லது அம்பாள் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வது நம்முடைய வாழ்க்கையில் உள்ள திருமண தடை குடும்பத்தில் பிரச்சினை குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தீர்க்கும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலே இருந்து ஆண்டாள் அல்லது அம்பாளுடைய திருவுருவப்படத்திற்கு மாலை சாற்றி இரண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
2. அம்மனுக்கு வளையல்கள் சமர்ப்பிங்கள்:
ஆடிப்பூரம் அன்று மிகவும் விசேஷ வழிபாடாக அம்மனுக்கு வளையல் சாற்றும் வழிபாடு இருக்கிறது. ஆதலால், உங்களால் முடிந்த எண்ணிக்கையில் கண்ணாடி வளையல்களை வாங்கி அம்மனுக்கு நீங்கள் சாற்றி வழிபாடு செய்யலாம். அலங்காரத்திற்கு பிறகு பிரசாதமாக அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொள்வதும் பிறருக்கு தானாக நீங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் ஒற்றுமை, தடைகள் எல்லாம் விலகும்.
3. ஆண்டாளுக்கு துளசி மற்றும் மலர்மாலை சற்றுங்கள்:
ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். ஆதலால் ஆண்டாளுக்கு துளசி, மல்லிகை, தாமரை அல்லது வாசனை மிகுந்த மலர்களால் மாலை சாற்றி கட்டாயம் வழிபாடு செய்வதால் திருமண வரன் நினைத்தது போல் கிடைக்கும். தம்பதிகள் இடையில் ஒற்றுமை நிலவும்.

4. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வெற்றிலை பாக்கு, இனிப்பு, தாம்பூலம் கொடுங்கள்:
இந்த நாளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், வளையல், கண்ணாடி அல்லது ஆடை போன்றவற்றை தாம்பூலமாக கட்டாயம் வழங்கலாம். இதனால் செல்வ வளமும் குடும்பத்தில் அமைதியும் அதிகரிக்கும்.
5. சர்க்கரைப் பொங்கல் வெல்ல பாயாசம் செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்:
பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் சேர்த்த சர்க்கரை பொங்கல் அல்லது பானகம் நீர் மோர் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்ற பொழுது சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ஆடிப்பூரம் அன்று நீங்கள் விளக்கேற்றி வளையல் சமர்ப்பித்து வழிபாடு செய்வதும் அம்மனுடைய முழு அருள் கிடைக்கும்.
மேலும், நாம் வழிபாடு செய்கின்ற பொழுது பொருட்களுடைய எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய மனதினுடைய பக்தியில் கவனம் செலுத்துங்கள். தூய பக்திக்கு பொருள் தேவை இல்லை அன்பு மட்டுமே போதும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |