2026: ஆடி கிருத்திகை எப்பொழுது? முருக பக்தர்கள் இந்த தினத்தை தவிர விடாதீர்கள்

By Sakthi Raj Aug 02, 2026 04:10 AM GMT
Report

முருகப்பெருமான் வழிபாடுகளில் ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கக்கூடிய ஆடி கிருத்திகையில் முருக பெருமானை வழிபாடு செய்தால் மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை அன்று வருவது மிகச் சிறப்பான நாளாக உள்ளது. அதாவது வருடங்களில் மற்ற மாதங்களில் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிக அளவு தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு மிக சிறப்பான நாட்கள் இருக்கிறது.

அதில் ஒன்றுதான் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை ஆகும். ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலைக்காலமாகும். இந்த காலத்தில் உப்பு இல்லாத உணவை சாப்பிட்டு கார்த்திகை விரதம் இருந்தால் நமக்கு வாழ்க்கையில் உயர்வும் ஒரு சிறப்பையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

2026: ஆடி கிருத்திகை எப்பொழுது? முருக பக்தர்கள் இந்த தினத்தை தவிர விடாதீர்கள் | 2026 Aadi Krithigai Date And Worship Benefits

பலரும் ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள். மேலும், நட்சத்திரங்களில் கிருத்திகை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முருகப் பெருமான் பிறந்தது விசாக நட்சத்திரம் என்றாலும் அவரை பாலூட்டி சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களுக்கு இந்த இடத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை:

ஆடி கிருத்திகை தினத்தன்று பூஜை அறையில் நன்றாக சுத்தம் செய்து முருகப்பெருமானுடைய திருவுருவப்படத்திற்கு முன்பாக அரிசி மாவில் ஆறு கோண கோலம் போட வேண்டும்.

2026: ஆடி கிருத்திகை எப்பொழுது? முருக பக்தர்கள் இந்த தினத்தை தவிர விடாதீர்கள் | 2026 Aadi Krithigai Date And Worship Benefits

பிறகு முருகப்பெருமான் படத்திற்கு நெய் தீபம் ஏற்றி பூக்கள் படங்கள் நெய்வேத்தியம் சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். பின்பு கட்டாயமாக இந்த நாளில் நாம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசத்தை பாராயணம் செய்வது அவசியம்.

இவ்வாறு செய்கின்ற பொழுது தீராத கஷ்டமும் தீர்ந்து நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US