2026: ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்ட மழை யாருக்கு?

By Sakthi Raj Apr 13, 2026 04:31 AM GMT
Report

 ஜோதிடத்தில் சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். மேலும், ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமர்ந்திருந்தால் தான் அந்த ஜாதகருக்கு சுகபோக வாழ்க்கையில் எந்த தடைகளும் இல்லாமல் கிடைக்கும்.

அப்படியாக, கிரகங்கள் ஒவ்வொரு கால நேரத்தில் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஏப்ரல் 19ஆம் தேதி பிற்பகல் 3. 57 மணிக்கு ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த தாக்கம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்ட மழை காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

2026: ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி.. அதிர்ஷ்ட மழை யாருக்கு? | 2026 April 19 Sukiran Peyarchi Prediction

2026: ஜோதிடர் ஷெல்வியின் தமிழ் புத்தாண்டு கணிப்புகள்.. உங்களுக்கு எப்படி உள்ளது?

2026: ஜோதிடர் ஷெல்வியின் தமிழ் புத்தாண்டு கணிப்புகள்.. உங்களுக்கு எப்படி உள்ளது?

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த இடம் மாற்றமானது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் வேலையில் அங்கீகாரம் மற்றும் பதிவு உயர்வு கிடைக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் உங்களுடைய ஆளுமை திறன் வெளிப்படும். காதல் வாழ்க்கையில் இனிமையும், உங்களின் காதல் திருமண வாழ்க்கையை நோக்கி செல்லக் கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகவும் அமைகிறது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த வழக்குகள் நீங்கள் எதிர்பார்த்ததை போல் முடிவை பெறும். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சில முக்கிய வழிமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகி மன அமைதியை பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உங்கள் மீது குடும்பத்தினருக்கு அதீத நம்பிக்கை உண்டாகும்.

தெய்வீக ஆற்றல் கொண்ட பெண் ராசிகள்... இவர்களிடம் ஈர்க்கும் தன்மை இருக்குமாம்!

தெய்வீக ஆற்றல் கொண்ட பெண் ராசிகள்... இவர்களிடம் ஈர்க்கும் தன்மை இருக்குமாம்!

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. புதிய முதலீடுகள் செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்ப உறவுகள் வலுவடையும். கடந்த கால உறவுகளிலிருந்து வந்த சிக்கல்கள் விலகும். எதையும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US