இன்றைய ராசி பலன் (29-07-2026)
மேஷம்:
இன்று நண்பர்களுடன் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்:
குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் பிரச்சனைகள் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே விட்டிக்கொடுத்து செல்வது அவசியம். வேலைபளு அதிகரிக்கும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.
மிதுனம்:
சிலருக்கு வெளிநாடு தொடர்பான விஷயங்கள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். தாய் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சில சங்கடம் உண்டாகும் நிலை வரலாம்.
கடகம்:
உணர்வு ரீதியாக சில குழப்பங்கள் உண்டாகலாம். தொழிலில் ரீதியாக சில குழப்பங்கள் வந்து மறையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள்.
சிம்மம்:
இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுடன் தேவை இல்லாமல் வம்பு வழக்குகள் வைத்தவர்கள் விலகி செல்வார்கள்.
கன்னி:
பிள்ளைகள் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். குடும்ப விஷயங்களை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
துலாம்:
மனதில் புது விதமான நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினருடன் மிகவும் கவனமாக பேச வேண்டும். உங்கள் நலனில் கூடுதல் செலுத்த வேண்டும். குலதெய்வ வழிபாடு சிறப்பு பலன் அளிக்கும்.
விருச்சிகம்:
வீடுகளில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு:
குடும்பத்தினர் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். கால் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சகோதரன் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சகோதரி வழி உறவுகளால் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்:
பொழுது போக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருகையால் நல்ல முன்னேற்றம் உண்டு.
மீனம்:
மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் வந்து செல்லும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |