திருவண்ணாமலை ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்.., உகந்த நேரம் அறிவிப்பு

By Yashini Jul 29, 2026 03:33 AM GMT
Report

ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம்

தமிழகத்தின் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

திருவண்ணாமலை ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்.., உகந்த நேரம் அறிவிப்பு | Tiruvannamalai Aadi Masam Pournami Girivalam Time  

திருவண்ணாமலையில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சுமார் 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்நிலையில், ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உகந்த நேரம் அறிவிப்பு

ஜூலை 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.32 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்.., உகந்த நேரம் அறிவிப்பு | Tiruvannamalai Aadi Masam Pournami Girivalam Time

கிரிவலம் செல்லும் பக்தர்கள், பஞ்சாட்சர மந்திரமான "நமசிவாய" அல்லது "சிவாய நம" என உச்சரித்தபடி கிரிவலம் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US