2026: விதியை மாற்றும் சனி செவ்வாய் சேர்க்கை.. ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்

Report

 2026 ஆம் ஆண்டு சனி செவ்வாய் சேர்க்கை ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அவர்களுடைய பிடிவாத குணத்தை குறைத்து விடாமுயற்சியுடன் போராடி மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுக்கபோகிறது.

அதாவது சனிபகவான் நிதானத்தையும் செவ்வாய் பகவான் வேகத்தையும் கொடுத்து இவர்களுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் உயர்த்த போகிறது. இந்த இரண்டு கிரகங்களும் சேரும்பொழுது இவர்களுக்கு தைரியமும் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எதையும் சமாளிக்க கூடிய திறன் கிடைக்கும். அப்படியாக, சனி செவ்வாய் சேர்க்கையால் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

2026: விதியை மாற்றும் சனி செவ்வாய் சேர்க்கை.. ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் | 2026 April 20 Sani Sevvai Conjuction Prediction

ஜாதகத்தில் யாருக்கு மிகப்பெரிய தொழில் அதிபர் ஆகக்கூடிய யோகம் கிடைக்கும்?

ஜாதகத்தில் யாருக்கு மிகப்பெரிய தொழில் அதிபர் ஆகக்கூடிய யோகம் கிடைக்கும்?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது இவர்களுக்கு மனதில் இருக்கக்கூடிய குழப்பத்தை நீக்கி எதையும் நிதானமாக பதட்டம் இல்லாமல் செய்து காரியங்களில் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதை செய்யக்கூடிய வலிமையும் பொருளாதார உயரத்தையும்கொடுக்கப் போகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது இவர்களுக்கு குடும்பத்தில் ஒரு முக்கிய முடிவுகளை எடுத்து அதில் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுக்க போகிறது. எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். நீண்ட நாட்கள் பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகும்.

2026: 40 வருடம் கழித்து கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

2026: 40 வருடம் கழித்து கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கப் போகிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நீண்ட நாட்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் தெளிவாக முடிவெடுத்து உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US