2026: மகர ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Apr 04, 2026 04:20 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக கிரக மாற்றங்களே நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்த்துகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் சனி பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினருக்கு கிரக மாற்றங்கள் பாதகமாக? அல்லது சாதகமாக என்று பார்ப்போம்.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகர ராசிக்கு நன்மை தீமை என்று இரண்டும் கலந்து கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் உடன் பிறந்த சகோதரர்களால் அல்லது சகோதர உறவுகளால் மன கஷ்டம், பொருள் இழப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், இவர்கள் கால் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். மாடிப்படி ஏறும் பொழுது இறங்கும் பொழுது இவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்

இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்

 

மகர ராசியினர் இந்த காலகட்டங்களில் குடும்பத்திற்கு தெரியாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. அதிலும் குறிப்பாக வாழ்க்கை துணைவுடன் எதையும் மறைக்காமல் இருப்பது நல்லது.

இவர்கள் 27ஆம் தேதி அட்சய திருதியை வர இருப்பதால் அன்றைய நாளில் தங்கும் வெள்ளி வாங்க முடியவில்லை என்று வருந்தாமல் புத்தாடைகள் வாங்கி குடும்பத்தில் கொடுக்கும் பொழுது மகிழ்ச்சி பொங்கும்.

குறிப்பாக மகர ராசியினருக்கு ஏப்ரல் மாதம் கிரகங்களுடைய மாறுதலால் வாழ்க்கையில் ஒரு படி முன்னேற்றத்தையாவது கட்டாயம் சந்தித்து விடுவார்கள்.

அப்படியாக, இந்த மாதம் அவர்களுக்கு என்னென்ன விஷயங்கள் சாதகமாகவும் பாதகமாக இருக்கிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US