2026: ஏப்ரல் மாதத்தில் தூள் கிளப்பப்போகும் விருச்சிக ராசியினர் .. துல்லியமான பலன்கள்

By Sakthi Raj Apr 02, 2026 04:17 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாறுதல் கட்டாயம் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் மாற இருக்கின்ற கிரக மாற்றங்கள் விருச்சிக ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

விருச்சிக ராசியினருக்கு இந்த ஏப்ரல் மாதம் மிகச் சிறந்த மாதமாகவே அமையப்போகிறது. இருப்பினும் அவ்வப்பொழுது சில மன அழுத்தத்தை இவர்கள் சந்திக்கலாம்.

காதல் வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் பழைய நல்ல விஷயங்களை இவர்கள் மீண்டும் பேசும் பொழுது அவர்கள் காதல் வாழ்க்கையில் இருக்கக் கூடிய விரிசல் விலகி நல்ல பிணைப்பு உண்டாகும்.

குரு செவ்வாய் சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் பெறும் ராசிகள் யார்?

குரு செவ்வாய் சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் பெறும் ராசிகள் யார்?

மேலும், தலைமை கிரகமான சூரிய பகவான் சித்திரை மாதம் முதல் ராசியான மேஷ ராசிக்கு இடம் மறுக்கின்றார். அதனால் விருச்சிக ராசியினருக்கு ஆறாம் இடத்தில் சூரியன் உச்சம் பெறுவதால் வேலை ரீதியாக மிகப்பெரிய அளவில் மாற்றமும் முன்னேற்றமும் பெற போகிறார்கள்.

சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையப்போகின்றது. ஒரு சிலருக்கு திடீர் காதல் மலராலாம்.

அப்படியாக இன்னும் விரிவாக விருச்சிக ராசியினருக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது என்று விரிவான பலன்களை முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US