2026: மேஷம் முதல் மிதுனம் வரை மே மாதம் எப்படி இருக்க போகிறது? அதிர்ஷ்டம் யாருக்கு?

By Sakthi Raj Apr 23, 2026 04:40 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களுடைய மாற்றங்களை வைத்து தான் நாம் எதிர்காலத்தை கணிக்கின்றோம். அவ்வாறு கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் கிரகங்கள் நமக்கு சாதகமான இடத்திற்கு வரும் பொழுது நம் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நடப்பதை காணலாம். அதே போல், நமக்கு பாதகமாக செய்லபடும் பொழுது அந்த நேரத்தில் ஒரு சில பாதிப்புகளையும் நாம் உணரலாம். அப்படியாக 2026 ஆம் ஆண்டு மே மாதம் மேஷம் முதல் மிதுனம் வரை ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

ஜோதிடம்: 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இவை எல்லாம் நடக்குமாம்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஐந்து நாள் இருக்கிறார். பிறகு அவர் புதன் வீட்டிற்கு நகர்கிறார். இதனால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தையும் நன்மையையும் செய்யப்போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டம் நிறைய வாய்ப்புகள் வர காத்திருப்பதால் எந்த வாய்ப்புகளையும் நல்ல விதமாக பயன்படுத்தி அவர்கள் வெற்றி அடைவதற்கான வேலையை செய்து கொள்ள வேண்டும்.



ரிஷபம்:

ரிஷப ராசிக்கு மே மாதம் ஒரு புதிய திருப்பமாகவே அமையப்போகிறது. யாரும் எதிர்பாராத விதமாக இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதாவது இவ்வளவு பெரிய உயரத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் தொட்டுவிடுவார்கள் என்று இவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பதவி உயர்வு தேடி வர போகிறது. மே மாதத்தில் இவர்கள் மூன்று நாட்கள் மட்டும் அமைதியாக இருந்து விட்டால் பிரச்சனையை சமாளித்து விடலாம்.



மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் ஒரு மிகச்சிறந்த மாதமாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி இவர்கள் ஒன்றிணையக்கூடிய காலமாகவே மாறப்போகிறது. விவாகரத்து வரை சென்றவர்கள் கூட இந்த காலகட்டங்களில் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் கூடும். 



ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US