ஜோதிடம் என்பது கிரகங்களின் மாற்றத்தை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு முக்கியக் கிரக மாற்றங்கள் நிகழ்கிறது. இதனால் உலகளாவிய மாற்றங்கள் பல்வேறு வகையில் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில் குரு பெயர்ச்சி இந்த 2026 ஆம் ஆண்டு முக்கிய பெயர்ச்சி ஆக இருக்கிறது.
அதாவது குரு தன்னுடைய உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சியாகிறார். மேலும் சனி பெயர்ச்சி மீன ராசியில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த கிரக மாற்றங்கள் நமக்கு எந்த மாதிரியான நன்மை தீமைகளை வழங்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
தற்பொழுது ராகு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இதனால் ஏற்கனவே கூட்ட நெரிசல்கள் போன்ற நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு அலுவலகத்தில் திடீர் என்று கூட்டமாக வேலை நிறுத்தம் போன்று நிலைமையும் உண்டாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவை மீண்டும் தொடரலாம். மேலும் குரு சனி ஐந்து ஒன்பதில் இருப்பதால் தொழில்நுட்ப ரீதியாக புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பொழுது தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி வருகின்ற ஆண்டுகளில் அந்த வளர்ச்சி இன்னும் உயரத்தை தொடும் என்றும் இதனால் பல்வேறு மாற்றங்கள் சமுதாயத்தில் உருவாக கூடும் என்று நம்பப்படுகிறது.
மேலும் கிரக மாற்றங்கள் உலகளாவிய நாடுகளில் எந்தெந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நமது பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் அவர்கள் அதை பற்றி பார்ப்போம்.