2026: மேஷ ராசியினர் ஏப்ரல் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

By Sakthi Raj Mar 24, 2026 06:56 AM GMT
Report

  ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொரு மாதம் என்று குறிப்பிட்ட சில காலத்தில் தங்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் மற்றும் நம்முடைய ஜாதகத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை பொருத்தும் பல்வேறு தாக்கங்களை நாம் சந்திப்போம்.

அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு எப்படி இருக்க போகிறது? ஏப்ரல் மாசம் சித்திரை வருடப்பிறப்பு பிறக்கின்ற நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசிக்கு மீன ராசியில் இருந்து இடம் மாறுவார்.

அதனால் மேஷ ராசியினருக்கு இந்த ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகவே அமையப்போகிறது. இவர்கள் நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு நல்ல வருமானம் வரக்கூடிய காலமாகும்.

தமிழ்நாட்டில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறும் அதிசய விநாயகர்.. எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் ஆறு மாதம் ஒருமுறை நிறம் மாறும் அதிசய விநாயகர்.. எங்கு தெரியுமா?

அதுமட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு திடீர் என்று பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். மேலும், அரசியல் இருப்பவர்களுக்கு முக்கிய பதவிகளை பெறக்கூடிய காலகட்டமாகவும் இந்த காலகட்டம் அமையும்.

இருப்பினும் இவர்கள் வயிறு தொடர்பான விஷயங்களில் மட்டும் சற்று கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும்.

அப்படியாக மேஷ ராசியினர் அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இன்னும் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடையவும் அவர்கள் பங்குனி உத்திரத்தன்று தவறாமல் குலதெய்வ வழிபாடும் முருகப்பெருமானின் வழிபாடும் செய்வது அவசியமாகும்.

இவர்கள் சிக்கல் சிங்கார வேலனையும் வழிபாடு செய்தால் மிகப்பெரிய நன்மைகள் பெறலாம் என்று சொல்கிறார்கள். 

இன்றைய ராசிபலன் (24-03-2026)

இன்றைய ராசிபலன் (24-03-2026)

ஆக அந்த கால மாற்றம் இவர்களுக்கு எப்படி இருக்க போகிறது? எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.

அதைப் பற்றி பார்ப்போம்

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US