2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?

By Sakthi Raj Jul 26, 2026 06:00 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய இடத்தை மாற்றிக்கொள்வது உண்டு. அந்த வகையில், நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கிறார்.

இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய ராசியை மாற்றுகிறார். அப்படியாக, கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி இரண்டாம் தேதி நள்ளிரவு 12.08 மணிக்கு மகா நட்சத்திரத்தின் இரண்டாம் வீட்டில் நடைபெறுகிறது.

அக்டோபர் 3 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மிகவும் நேர்மறையான பலன்கள் கிடைக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கப்போகிறது. வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் இவர்களுக்கு ஒரு நல்ல முடிவை கொடுக்கும்.

உடன் பிறந்தவர்களால் ஆதரவும் அவர்களுடைய ஒத்துழைப்பால் முக்கிய காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் சுபபலனைக் கொடுக்க போகிறது. தம்பதியினர் இடையே இருந்து வந்த மன வருத்தம் விலகும்.

இவர்களுக்கு விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் வந்து சேரும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்களை இவர்கள் மீண்டும் கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாக்கும்.

நீங்கள் பிறந்த தமிழ் மாதப்படி நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?

நீங்கள் பிறந்த தமிழ் மாதப்படி நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உயர் அதிகாரிகளின் வழியாக முக்கியமான விஷயங்கள் நிறைவேறும். வழக்குகளில் இருந்து வந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.

மனதில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வேலையில் அனுகூலமான வாய்ப்புகள் இவர்களுக்கு தேடி வரும். எதிர்பார்த்த பொருட் சேர்க்கை இந்த காலகட்டங்களில் உண்டாகும். அதிர்ஷ்டம் பெருகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US