2026: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.. குபேர ஐஸ்வர்யங்களை பெறும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.
அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானார். ஆதலால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் பாதியில் நின்ற வேலை இவர்களுக்கு நல்ல முடிவை கொடுக்க போகிறது.
மீடியா மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பொன்னான காலமாக அமையப் போகிறது. எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய காலமாகும்.
கன்னி:
பூச நட்சத்திரத்தில் புதன் பகவானுடைய சஞ்சாரம் கன்னி ராசிக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த அரசு வேலைகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.
வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானுடைய பூச நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர்ந்த செல்வாக்கை அளிக்க போகிறது.
வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |