2026 ஆகஸ்ட் பலன் : பெயர் புகழ் அதிகாரத்தோடு வாழப்போகும் மகர ராசியினர்..

By Sakthi Raj Jul 26, 2026 04:40 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில், மகர ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரம் மற்றும் பதவி தேடி வரப்போகிறது.

சூரியன் ஆட்சி பெறுவதால் இவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

நரம்பு தளர்ச்சி மற்றும் தேவையில்லாத திடீர் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குருபகவான் ஏழாம் இடத்தில் உச்சம் பெறுவதால் இவர்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி பிரிந்தவர்கள் கூட ஒன்று சேர்ந்து வாழக்கூடிய காலகட்டம் அமையப்போகிறது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்தில் சனி பெயர்ச்சி.. கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்

சுக்கிர பகவான் நீசமாக இருப்பதால் ஆகஸ்ட் மாதம் முழுவதும் சொத்து தொடர்பான எந்த முயற்சிகளும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் குறிப்பாக ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதியில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விட வேண்டும்.

இவர்கள் இந்த காலகட்டங்களில் சூரிய பகவான் மற்றும் சிவபெருமானை முழுமையாக வழிபாடு செய்வதும் கோதுமை தானியத்தை புறாக்களுக்கு உணவாக அளிப்பதும் மிகச்சிறந்த பலனை கொடுக்கும்.

இவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று மற்றும் சூரிய கிரகணம் அன்று தியானம் மற்றும் மந்திரங்களை பாராயணம் செய்வது சிறப்பு பலன்களை கொடுக்கும். மேலும், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US