2026: விபரீத ராஜயோகம் பெறும் தனுசு ராசியினர்.. ஆகஸ்ட் மாதம் என்ன நடக்கப்போகிறது?
ஜோதிடத்தில் குரு பகவான் உடைய ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் எப்பொழுதும் ஒருவரை வழி நடத்துவதில் மிகச்சிறந்தவராக இருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் நடக்கக்கூடிய கிரக மாற்றங்களால் தனுசு ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
இவர்களுக்கு செவ்வாய் எட்டாம் இடத்தில் மறைந்து மிகவும் கலவையான பலன்களை கொடுக்கப் போகிறார். ஒரு சிலருக்கு விபரீத யோகத்தை ஏற்படுத்தி வேலை ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் நிலம் தொடர்பான எதிர்பாராத லாபங்களையும் கொடுக்க போகிறது.
அதோடு, ஒன்பதாம் இடத்தில் சூரியன் மற்றும் புதன் பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் பொருளாதாரத்தில் திடீர் லாபங்கள் கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.
கூடுதலாக ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதியர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
சுக்கிர பகவான் நீசம் அடைவதால் இவர்கள் மேற்கொள்ளும் திருமண முயற்சிகள் மற்றும் புதிய தொழில் வளர்ச்சி அதனால் செய்யக்கூடிய ஒப்பந்தங்களை தள்ளி வைப்பது நன்மையை கொடுக்கும்.
இந்த காலகட்டங்களில் இவர்கள் ஸ்ரீரங்கம் சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இவர்கள் 16ம் தேதி வருகின்ற நாக சதுர்த்தி, கருட பஞ்சமி மற்றும் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டு வழிபாடு செய்வதும் இவர்களுக்கு மிகப்பெரிய பலனை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், தனுசு ராசிகளுக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |