2026 ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்.. 3 ராசிகளுக்கு சிக்கல் காத்திருக்கிறதாம்

By Sakthi Raj Jun 11, 2026 11:43 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் ஆவணி அமாவாசை அன்று நிகழ இருக்கிறது. இந்த ஆண்டின் இது மிகவும் முக்கியமான அமாவாசையாக கருதப்படுகிறது. அப்படியாக, இந்த சூரிய கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சில சிக்கல்களை கொடுக்க காத்திருக்கிறதாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 ஆம் ஆண்டு கிரகணம் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று நிகழ்ந்தது. இரண்டாவது கிரகணம் ஆகஸ்ட் 12 ஆவணி அமாவாசை அன்று நிகழ்கிறது. அப்போது சந்திர மற்றும் சூரியன் இரண்டும் கடக ராசியில் சஞ்சரிப்பார்கள்.

இதனால் கடக ராசிக்காரர்கள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதனை அடுத்து சிம்மம், மேஷம், விருச்சிக ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்.

2026 ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்.. 3 ராசிகளுக்கு சிக்கல் காத்திருக்கிறதாம் | 2026 Avani Amavasya Astrology Prediction

2026 பரம ஏகாதசி: இன்று பெருமாளின் முழு அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்

2026 பரம ஏகாதசி: இன்று பெருமாளின் முழு அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரங்கள்

சிம்மம்:

இந்த சூரிய கிரகமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த போகிறது. இவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண இழப்புகள் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க கூடும்.

சக ஊழியர்களிடம் நீங்கள் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும். உங்கள் பேச்சு வார்த்தைகளில் நீங்கள் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம். இவர்களுக்கு வியாபார ரீதியாக தொந்தரவு தந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனுடைய இந்த கிரகணப் பெயிற்ச்சியானது இவர்களுக்கு மனநிலையில் ஒரு சில மாற்றங்களை கொடுக்கப்போகிறது. திடீர் பொருளாதார நஷ்டம், வியாபாரத்தில் பின்னடைவுகளை சந்திக்க கூடும்,

குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் வரலாம், இந்த காலகட்டங்களில் யாரை நம்பியும் பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்த்து விட வேண்டும், ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஜோதிடம்: பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

ஜோதிடம்: பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணப் பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலையில் சில பாதிப்புகளை உண்டு செய்யும். மேல் அதிகாரிகளுடன் சில கருத்து மோதல்கள் ஏற்படலாம். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கிரகணத்திற்கு பிறகு 15 நாட்கள் எந்த ஒரு முக்கிய வேலையையும் துவங்குவதை தவிர்ப்பது நல்லது. அதைப்போல் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருப்பது அவசியமாகும்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US