2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யக்கூடிய சரியான முறை என்ன?
பொதுவாக, இந்து மதத்தில் விநாயகர் வழிபாடு செய்யாமல் எந்த ஒரு புதிய காரியங்களும் வேலையையும் தொடங்குவது இல்லை. அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
தடைகளை நீக்கக்கூடிய முழுமுதற் கடவுளாக விநாயகர் பகவான் இருக்கிறார். மேலும், விநாயக பகவான் பெருமான் உடைய ஒவ்வொரு உறுப்பும் நமக்கு ஒரு பாடத்தை கற்பித்துக் கொடுக்கிறது.

அவருடைய பெரிய தலை ஞானத்தையும், பெரிய காதுகள் நற்செய்திகளைய கேட்பதையும், சிறிய கண்கள் ஆழமான கவனங்களையும் பெரிய வயிறு பொறுமையையும் நமக்கு எடுத்து சொல்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை களிமண் பிள்ளையார் வழிபாடு செய்வது சிறந்தது.
விநாயகர் பிடித்த கொழுக்கட்டை பழங்கள் மற்றும் அருகம்புல் கொண்டு வழிபாடு செய்யலாம். விநாயகருக்கு 21 என்ற எண்ணிக்கையில் கொழுக்கட்டை அல்லது அருகம்புல் படைப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |