நாளைய ராசிபலன் (02-11-2026)
மேஷம்:
நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆலய திருப்பணிகளில் கலந்து கொள்வீர்கள். கற்பனைத் திறன் வளரும். தொழிலில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
ரிஷபம்:
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு விஷயங்களில் பொறுமையாக கையாள்வது அவசியம்.
மிதுனம்:
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உயரும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகளை சந்திப்பீர்கள்.
கடகம்:
சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களுடைய வட்டம் விரிவடையும். ஆரோக்கியத்தில் சிக்கல்கள் விலகும். முயற்சிகளில் தாமதம் உண்டாகலாம்.
சிம்மம்:
நெருக்கமானவர்களிடம் சில வாக்குவாதங்களை சந்திப்பீர்கள். மறைமுகமான சில எதிர்ப்புகள் வரலாம். தேவை இல்லாத வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
கன்னி:
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
துலாம்:
தொழில் ரீதியாக எண்ணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
மனதளவில் சில தெளிவு பிறக்கும். குடும்பத்தை அனுசரித்து செல்வது அவசியம். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
தனுசு:
ஒருவருடைய மனவலியை அறிந்து செயல்படுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கலாம். வழக்கு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பயணங்களின் பொழுது கவனம் வேண்டும்.
மகரம்:
வேலை தொடர்பான ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் வழியே நல்ல புரிதல் உண்டாகும். வெளியூர் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம்:
திடீர் வரவுகளால் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். குழந்தைகளை பற்றிய குழப்பம் விலகும். வேலையில் எதிர்பாராத உயர்வு கிடைக்கும்.
மீனம்:
வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைக்கூடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |