2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடக ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று ராம்ஜி சுவாமிகள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி பார்ப்போம். இரண்டாம் இடத்தில் செவ்வாய் குருவுடன் சேர்ந்து இருப்பதால் குரு மங்கள யோகம் உருவாகுகிறது.
அதனால், இவர்களுக்கு இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பண வரவருக்கு ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகப் போகிறது.
மேலும், டிஜிட்டல் ஊடகம், கல்வி, மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்க போகிறது. இருப்பினும் சூரியனுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்கள் டிசம்பர் 16ஆம் தேதிக்கு மேல் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

இவர்கள் ராசியில் கேது இருப்பதால் இவர்களுக்கு அதிக அளவில் இறை சிந்தனை தோன்று. 'ருத்ர ஹோமம்' செய்வது மற்றும் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை கொடுக்கும்.
அதேபோல், ஏழாம் இடத்தில் ராகு இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி கவனமுடன் செயல் படுவது அவசியம்.
இவர்கள் டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |