2026 ராகு கேது: பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் ஒரு வரியில் பலன்கள் தெரிந்து கொள்வோம்
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் டிசம்பர்5 இரவு 10.32 மணிக்கு ராகுபகவான் கும்பத்திலிருந்து மகரத்திற்கும், கேது பகவான் சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்.
இந்த நிலை 2028 ஜூன் மாதம் வரை இருக்கிறது. 12 ராசிகளுக்கும் ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று ஒருவரியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், புதிய பொறுப்புகள் தேடிவரும், வீடு சொத்தில் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
வெளிநாட்டு வாய்ப்புகள் உண்டு. ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும்.
மிதுனம்:
பண விஷயங்களின் கவனமாக இருக்க வேண்டும். நிதானதோடு செயல்பட வேண்டும்.
கடகம்:
திருமணம் மற்றும் கூட்டுத் தொழிலில் பொறுமை அவசியம்.
சிம்மம்:
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை குறையும்.
கன்னி:
கல்வி மற்றும் குழந்தைகள் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்:
வீடு வாகனம் சொத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். தொழிலில் புதிய தேடல் உண்டாகும்.
விருச்சிகம்:
தைரியம் மற்றும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீக பயணம் செய்வீர்கள்.
தனுசு:
பேச்சில் நிதானம் இருக்கும். பண விஷயங்களில் கவனம் வேண்டும். உடல் நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகரம்:
தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை சந்திப்பீர்கள். உறவுகளில் பொறுமை அவசியம்.
கும்பம்:
செலவுகள் அதிகரிக்கும். பண வாய்ப்புகள் மன அமைதியின்மை வரலாம்.
மீனம்:
நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |