வாழ்க்கையில் இவர்களிடம் ஒருபொழுதும் சாபம் பெற்று விடாதீர்கள் ஆபத்தாகிவிடும்
இந்த உலகத்தில் பலரும் பிறந்து மறைவது உண்டு. ஆனால், ஒரு விஷயம் மட்டும் மறைவதே இல்லை. அதுதான் தர்மம். ஒவ்வொரு மனிதனும் தங்களுடைய வாழ்க்கையில் தர்மத்தோடு வாழ்வது அவசியம்.
சக மனிதர்கள் தர்மம் மீறி செய்யக்கூடிய செயலினால் பாதிக்கப்படும் நபர் கண்ணீர் விடுகின்ற பொழுது நிச்சயம் அந்த கண்ணீர் பாதிப்பு உண்டு செய்த நபரை பெரிய அளவில் தாக்கும் என்பது தான் இந்த உலகத்தின் நியதி.
அந்த வகையில், ஒருவர் மிகுந்த உச்சகட்ட வேதனையில் சாபம் விடுவது உண்டு. அதை சாபம் என்று சொல்ல முடியாது. அந்த நேரத்தில் அவர்கள் வெளிப்படுத்தக்கூடிய மனக்குமுறல்.

ஆனால், அது காலப்போக்கில் சாபமாக மாறிவிடுகிறது. அப்படியாக, வாழ்க்கையில் தவறியும் நாம் இவர்களுடைய சாபத்தை மட்டும் பெற்று விடவே கூடாதாம்.
அவ்வாறு சாபம் பெற்று விட்டால் நாம் உயர்ந்த இடத்திற்கு செல்லவே முடியாது. மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது. அதை பற்றி பார்ப்போம்.
நாம் எப்பொழுதும் பெற்ற தாய் தந்தையினுடைய சாபத்தை வாங்கி விடவே கூடாது. ஒருவர் நோயினால் அவதிப்பட்டு இருக்கின்ற பொழுது அவருடைய மனம் வேதனைப்படும் படி நாம் நடந்து கொள்ள கூடாது.

அது மிகப்பெரிய அளவில் சாபத்தை உண்டு செய்யும். குருமார் சாதுக்கள் ஆகியோரின் சாபத்தையும் நம் வாங்கிவிடக்கூடாது. அதை போல், ஒருவர் பெரும் துயரத்தில் துன்பத்தில் இருக்கும் பொழுது அவரிடத்தில் சாபத்தை வாங்கிவிடவே கூடாது.
ஒரு வயதானவர்கள் முதுமையில் இயலாமல் இருக்கும் பொழுது அவரிடம் சாபத்தை பெற்று விடவே கூடாது. இந்த சாபம் எல்லாம் ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடாது. இந்த பிறவி மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் அவர்கள் நிம்மதியை நாடிச் செல்ல முடியாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |