பகவத் கீதை: மற்றவர்களிடம் இந்த ஒரு விஷயத்தை மட்டும் எதிர்பார்க்காதீர்கள்
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் ஏமாற்றம் என்பது நம்முடைய எதிர்பார்ப்புகளாலே நடக்க கூடியது. அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்றால் மன வருத்தமும், ஏமாற்றமும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.
இந்த ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு அழகான வாழ்க்கை பாடத்தை எடுத்துரைக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

பகவத் கீதை – அத்தியாயம் 2, ஸ்லோகம் 47:
"கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந"
பொருள்:
மனிதர்களுக்கு எப்பொழுதுமே அவர்களுடைய கடமையை செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. செய்யக்கூடிய கடமைகளால் வரக்கூடிய பலனை அவர்களால் தீர்மானிக்கக்கூடியதில்லை.
ஆகவே, செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் மற்றவர்களிடையே பாராட்டுகளையும் அங்கீகாரத்தையோ எதிர்பார்க்காமல் நம்முடைய கடமையை சரியாக செய்வதே சிறந்த செயலாகும்.

எனவே, தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். "மற்றவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் பரவாயில்லை. நான் நல்ல எண்ணங்களுடன், தர்ம செயல்களை செய்து கடின உழைப்போடு சரியான பாதையில் சென்று எனக்கான இலக்கை நோக்கி பயமின்றி பலன் எதிர்பாராமல் செய்வேன் என்று".
இவ்வாறு தொடர்ந்து செய்கின்ற பொழுது கட்டாயமாக அந்த பயணம் "நல்ல பலனைக் கொடுக்கும்.". அதற்கு முன்பாகவே செய்யக்கூடிய செயலுக்குரிய பலனை நினைத்து கவலையை கொண்டு சோர்ந்து விடவேண்டாம்.
இன்றைய சிந்தனை:
உண்மையிலேயே பிறர் தரக்கூடிய அங்கீகாரத்தை விடவும் நாம் செய்யக்கூடிய செயல்களில் இருக்கக்கூடிய நேர்மையே நமக்கு உண்மையான வெற்றி ஆகும்.
குறிப்பு:
இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |