2026: ராகு கேது பெயர்ச்சி: மேஷ ராசிக்கு எப்படி உள்ளது? முழு பலன்கள் இதோ
ஜோதிடத்தில் ராகு கேது நிழல் கிரகமாக இருந்தாலும் முக்கியமான கிரகமாக இருக்கிறார்கள்.அதோடு இவர்களுடைய 7 ஆம் வீடு பார்வையும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் சஞ்சரித்த ராகு, மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் செவ்வாய் ஆதிக்கத்தை கொண்ட மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

ராகு கேதுவால் நடக்கும் நன்மைகள்:
மேஷ ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சியால் இவர்களுக்கு வேலையில் கட்டாயம் இடமாற்றம் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு தூரமாக சொத்துக்கள் சேர்க்கை உருவாகும்.
கல்வி மற்றும் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் கட்டாயமாக அதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலருக்கு இந்த காலகட்டங்களில் புதிய காதல் மலர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவன சிதறல் ஏற்படக்கூடிய காலகட்டம் என்பதால் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதேபோல் தொழில் செய்வதற்காக எந்த இடங்களிலும் கடன் வாங்குவதையோ தேவையில்லாமல் அகல கால் வைத்து ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
விட்டுக்கொடுத்து சென்றால் விவாகரத்தை தவிர்கலாம். இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு குழப்பங்கள் மற்றும் வீண் பிரச்சனைகள் விலக துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்ல வழி பிறக்கும். இதனால் இவர்களுக்கு மன அமைதியும் தைரியமும் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |